AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs IRE: இந்தியா – அயர்லாந்து போட்டி தொடங்க ஒரே நாள்தான்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்.. காரணம் என்ன?

IND vs IRE T20 Time Change: இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரு டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் என்று அயர்லாந்து கிரிக்கெட் கூறியதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் முதலில் இரவு 7:00 மணிக்குத் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

IND vs IRE: இந்தியா – அயர்லாந்து போட்டி தொடங்க ஒரே நாள்தான்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்.. காரணம் என்ன?
இந்தியா - அயர்லாந்து டி20 தொடர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2026 16:13 PM IST

ஆப்கானிஸ்தான் தொடரை தொடர்ந்து இந்திய அணி (Indian Cricket Team) 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் (Ind vs Ire) மேற்கொள்கிறது. இந்தத் தொடர் நாளை அதாவது 2026 ஜூன் 26ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐபிஎல் 2026-க்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் டி20 தொடர் இதுவாகும். ஆனால், தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இரண்டு போட்டிகளின் நேரமும் கணிசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: முதல் 7 இடங்களில் 4 இடங்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!

போட்டி நேரத்தில் மாற்றமா?

இந்தியா மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 28ம் தேதி நடைபெறுகிறது. இதே நாளில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 2வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடைபெறுகிறது. இந்தியா-அயர்லாந்து போட்டிகளின் நேரம் ஒரு மணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. இரண்டு டி20 போட்டிகளும் பெல்ஃபாஸ்டில் நடைபெறும்.

இந்தியா-அயர்லாந்து டி20 போட்டி இப்போது எத்தனை மணிக்குத் தொடங்கும்?

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரு டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் என்று அயர்லாந்து கிரிக்கெட் கூறியதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் முதலில் இரவு 7:00 மணிக்குத் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு நேரங்கள் வேண்டுமென்றே ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் டி20 போட்டிகள் பொதுவாக உள்ளூர் நேரப்படி (IST) இரவு 7:00 மணிக்குத் தொடங்குமாறு திட்டமிடப்படுகின்றன. அயர்லாந்து டி20 தொடரும் இதேபோல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அதை மாற்றப்பட்டுள்ளது.

அயர்லாந்து டி20 தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏன்..?

அயர்லாந்து டி20 தொடரில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகமாக அமையக்கூடும். தொடர்ச்சியாக 2 ஐபிஎல் சீசன்களில் ஜொலித்த வைபவின் அறிமுகம், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவுக்காக அறிமுகமாகும் இளம் வீரர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைக்கக்கூடும்.

ALSO READ: இந்தியாவில் இந்தியா – அயர்லாந்து டி20 போட்டி எத்தனை மணிக்குத் தொடங்குகிறது? முழு விவரம் இதோ!

இந்தியா மகளிர் -ஆஸ்திரேலியா மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி எப்போது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இந்தப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

 

Follow Us