AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவில் 3 பேருக்கு மாநில பதவி… எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு.. யார் அவர்கள்..!

Edappadi K Palaniswami : அதிமுகவில் 3 பேருக்கு மாநில அளவிலான் பதவி அளித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் யார் யார். அவர்களுக்கு என்னென்ன பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அதிமுகவில் 3 பேருக்கு மாநில பதவி… எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..  யார் அவர்கள்..!
அதிமுகவில் 3 பேருக்கு மாநில பதவி அளிப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Jun 2026 20:20 PM IST

அதிமுகவில் உள்ளவர்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி பதவிகளை வழங்கி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் முன்னாள் எம்எல்ஏவான எதிர்க்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன், கட்சியின் மகளிர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் வி. எம். ராஜலட்சுமி ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 26- ஆம் தேதி) முதல் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு துணை செயலாளர்கள் மற்றும் கட்சியின் மகளிர் அணி இணை செயலாளர்களாக பின்வரும் நபர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

மேலும் படிக்க: விழா பேனரில் 2- ஆவது இடம்.. நான்வேனா எழுந்து சென்றுவிடவா? மேடையிலேயே வெடித்து சிதறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலர்

  • அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்: எஸ். எம். சுகுமார் எம்எல்ஏ ( ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்).
  • எதிர்க்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன் முன்னாள் எம்எல்ஏ ( சாத்தூர் சட்டமன்ற தொகுதி, விருதுநகர் மாவட்டம்).
  • கே. சி. பழனிசாமி பிகாம் ( சூரியம்பாளையம் பகுதி கழக செயலாளர், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர்).
  • அதிமுக மகளிர் அணி இணை செயலாளர்: வி. எம். ராஜலட்சுமி ( அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர்).

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்

இவர்களுக்கு அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் ஆகியோர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தனித்தனியாக பிரிந்து குழுவாக செயல்பட்டு வந்தனர். மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிரூபித்த போது, அதற்கு ஆதரவாக எஸ். பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவளித்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிமுகவில் மீண்டும் கட்சி பதவி அளிப்பு

இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உடன், எஸ். பி. வேலுமணி தரப்பு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், ஏற்பட்ட உடன்பாடு காரணமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட தொடங்கினர். இதனிடையே, அவர்களின் கட்சி பதவி பறிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதில், எஸ். பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணை பொது செயலாளர் பதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா மு.க.ஸ்டாலின்.. அவரே அளித்த முக்கிய பதில்!

Follow Us