AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather report: இன்று இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

Tamil Nadu weather today : பல்வேறு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும் இதன் காரணமாக அக்டோபர் 7, 2026 இன்று தமிழகத்தில் 20 மாவட்ங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu Weather report: இன்று இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Oct 2026 06:20 AM IST

சென்னை, அக். 7: கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 7, 2026 இன்று தமிழகத்தில் 20 மாவட்ங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பதிவில், தெற்கு கேரள கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், வட தமிழகத்தின் மீதும் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. மன்னார் வளைகுடா முதல் மத்திய மகாராஷ்டிரா வரை, தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நீடிக்கிறது. இதன் காரணமாக அக்டோபர் 12, 2026 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விஜயை தொடர்ந்து தனுஷ்.. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு.. என்ன பெயர் தெரியுமா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 7, 2026 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய 20 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியின் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 8, 2026 கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 9, 2026 நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : சொத்து விவரத்தை மறைத்தேனா? – உயர் நீதிமன்றத்தில் முதல்வர் தரப்பு வாதம்

அக்டோபர் 10, 2026 அன்று கோவை மலைப்பகுதிகள் மற்றும் தேனியில் கன மழை பெய்யக்கூடும். ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, கரூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 11, 2026 மற்றும் அக்டோபர் 12, 2026 ஆகிய 2 நாட்கள் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அக்டோபர் 7,2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி, குறைந்தபட்சம் 26 முதல் 27 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us