AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu weather: நாளை இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழகத்தில் அக்டோபர் 6, 2026 இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu weather: நாளை இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Oct 2026 17:34 PM IST

சென்னை, அக்டோபர் 6 : தமிழகத்தில் அக்டோபர் 6, 2026 இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 23 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த 20 மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு கேரள கடலோரத்துக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், வட தமிழகப் பகுதியிலும் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தலா ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, மன்னார் வளைகுடாவிலிருந்து தமிழகம், உள் கர்நாடகா வழியாக மத்திய மகாராஷ்டிரா வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நீண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : “விவசாயிகள் நலனில் துளியும் அக்கறை இல்லை!”.. வேளாண்துறை செயலர் நியமனம் குறித்து அரசுக்கு உதயநிதி கேள்வி!!

இந்த நிலையில் அக்டோபர் 7, 2026 நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 20 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 8, 2026 கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 9, 2026 வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாரவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 23 மாவடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க : “ஒத்த ரூபாய் கூட நான் கொடுக்கல.. நிரூபிச்சு காட்டுங்க!”.. மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் சவால்!!

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10, 2026 சனிக்கிழமை கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, கரூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 11, 2026 மற்றும் அக்டோபர் 12, 2026 ஆகிய 2 நாட்கள் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us