5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் மழை இருக்குமா? வானிலை அப்டேட்..
Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27° செல்சியஸாகவும் இருக்கும்.
அக்டோபர் 6, 2026: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சில பகுதிகளில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஈரோட்டில் 37.6°, திருச்சியில் 36.9°, திருத்தணியில் 36.5°, நாமக்கல்லில் 36° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 35° செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 34.6° செல்சியஸும் பதிவானது.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அக்டோபர் 6-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: திருமண பெண்களுக்கு குட் நியூஸ்.. அண்ணன் சீர் திட்டம்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்!
அக்டோபர் 7, 8-ம் தேதிகளில் மழை
அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரத்தில் விதிமீறல்.. வேட்பாளர்கள் செயலால் அதிருப்தி.. தேர்தல் ஆணைய புகாரால் சிக்கலில் தவெக?
அக்டோபர் 9 முதல் 11 வரை
அக்டோபர் 9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா, வடமேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழகத்தில் மழை வாய்ப்புள்ளது. 11-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27° செல்சியஸாகவும் இருக்கும்.