திருமண பெண்களுக்கு குட் நியூஸ்.. அண்ணன் சீர் திட்டம்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்!
Annan Seer Scheme : தமிழகத்தில் அண்ணன் சீர் வழங்கும் திட்டத்துக்காக ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான சிறப்பு இணையதள பக்கம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டு புடவை வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார். தற்போது, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஒவ்வொரு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்ணன் சீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் அண்ணன் சீர் திட்டத்தை கீழ், திருமணம் ஆகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு
அண்ணன் சீர்திருத்தத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறும் வகையில் விரைவில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இதற்கான சிறப்பு இணையதள பக்கத்தை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் விரைவில் அண்ணன் சீர்திருத்தத்துக்கான இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு.. 6 பேர் தீக்குளிக்க முயற்சி.. என்ன காரணம்!




செயல்பாட்டுக்கு வரும் தவெக அரசின் திட்டங்கள்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களான அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் இன்றி பெண்கள் பயணம் மேற்கொள்ளும் வெற்றி மகளிர் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிதாக திருமணம் முடிக்கும் பெண்களுக்கு அண்ணன் சார்பில் சீர் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் அண்ணன் சீர் திட்டம் தொடக்கம்
இந்த திட்டத்திற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினம் முதல் அண்ணன் சீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருமணம் முடிக்கும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!