AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு.. 6 பேர் தீக்குளிக்க முயற்சி.. என்ன காரணம்!

Salem Crime : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம் போல நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில் பங்கேற்க வந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு.. 6 பேர் தீக்குளிக்க முயற்சி.. என்ன காரணம்!
சேலத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Oct 2026 16:03 PM IST

தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்கும் வகையிலும், அவர்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்கும் வகையிலும் வாரம் தோறும் திங்கள்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று திங்கள் கிழமை ( அக்டோபர் 5- ஆம் தேதி) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதே போல, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து வந்தனர். அப்போது, அங்கு வந்திருந்த 5 பெண்கள் உள்பட 6 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

தீக்குளிக்க முயன்ற பெண்கள் விவரம்

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி கட்டுப்படுத்தினர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள், சேலம் மாவட்டம், ஓமலூர் கற்கள் பாடி பகுதியை சேர்ந்த விஜயா ( 46 வயது), சித்ரா ( 42 வயது), வெண்ணிலா ( 26 வயது), மீனா ( 25 வயது), சண்முகப்பிரியா ( 21 வயது) உள்பட 6 பேர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, சண்முகப்பிரியா என்ற பெண் கூறுகையில்,

மேலும் படிக்க: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து!

பெண்கள் தீக்குளிக்க முயன்ற காரணம்

நாங்கள் வசித்து வரும் பகுதியில் அனைவரும் தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் சிலர் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி செய்து வருகின்றனர். இதனால், வீட்டில் இருந்து வெளியே சென்று வர முடியாமல் தவித்து வருகிறோம். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று வர முடியவில்லை. பெரியவர்களும் வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர்.

வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி

இது தொடர்பாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் வசிக்கும் பகுதியில் வழித்தடம் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக, சேலம் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரே நேரத்தில் 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: பிரசாரச் செலவு வரம்பை மீறிய தவெக வேட்பாளர்கள்?.. தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!

Follow Us