தலைநகரில் பிரதமர் மோடியின் மாஸ் என்ட்ரி.. சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பிரம்மாண்ட ரோடு ஷோ.. அதிரப்போகும் சென்னை!
PM Modi Road Show In Chennai : சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11- ஆம் தேதி பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார் . இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர் .
பிரதமர் நரேந்திர மோடி வருகிற அக்டோபர் 11- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் சாலை வலம் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர உள்ளார். அதன்படி, அக்டோபர் 11- ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வருகை தரும் அவர் கார் மூலமாக போரூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு, நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதை தொடர்ந்து, சென்னை ஐ. டி. ஐ. நந்தம்பாக்கம் வர்த்தக மையம் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பிரதமர் மோடி ரோடு ஷோ
முன்னதாக போரூரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கார் மூலமாக அடையாறில் உள்ள ஐ. ஐ. டி. க்கு செல்கிறார். பிரதமர் செல்லும் வழியில் வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, சைதாப்பேட்டை சின்ன மலை பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை வழியாக ஐ. ஐ. டி. வரையிலான சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இரு பக்கமும் ஆயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வரவேற்க உள்ளனர்.
மேலும் படிக்க: 8 மணி நேர மின் வெட்டு?…. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள்!




ஒரே மேடையில் பிரதமர் மோடி- முதல்வர் ஜோசப் விஜய்
இதே வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலை வலமும் செல்ல உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் மூலமாக பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது பலத்தை காட்டவும் திட்டமிட்டுள்ளனர். போரூரில் நடைபெறும் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் தீவிரம்
இதன் காரணமாக அந்த பகுதிகளில் அதிக அளவு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதில், பாரதிய ஜனதா கட்சியினர் தனித்துவமாக தெரியும் வகையில் அனைவரும் கட்சி கொடிகளுடன் பிரதமரை வரவேற்க அதிக அளவினோர் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் ஒரு மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே போல, நந்தம்பாக்கம், ஐஐடி ஆகிய இடங்களில் பிரதமரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “தெருத்தெருவாக பிரசாரம் செய்வதற்கு தோல்வி பயமே காரணம்!”.. முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!!