AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தெருத்தெருவாக பிரசாரம் செய்வதற்கு தோல்வி பயமே காரணம்!”.. முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!!

Nainar Nagenthiran Slams CM Vijay: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசு மீது கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். தவெக ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், தோல்வி பயம் காரணத்தினாலேயே முதல்வர் விஜய் தற்போது கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார் என்றும் சாடியுள்ளார்.

“தெருத்தெருவாக பிரசாரம் செய்வதற்கு தோல்வி பயமே காரணம்!”.. முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!!
நயினார் நாகேந்திரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Oct 2026 07:49 AM IST

சென்னை, அக்.05: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நாளை சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கருத்து மோதல்களும் அரசியல் விவாதங்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் வாக்குறுதிகள், சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் ஆளும் அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : தவெக மைனாரிட்டி அரசுக்கு தக்க பதிலடி – தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்

தேர்தல் வாக்குறுதிகளும் திட்டங்களின் நிலைமையும்:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசு விளம்பரப்படுத்தும் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் அனைத்தும் ஏமாற்றமே என்று குற்றம் சாட்டினார். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது; ஆனால் தற்போதைய அரசு புதிதாக எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை” என்று சுட்டிக்காட்டினார். மேலும், ‘சிங்கப்பெண் படை’ உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்ட பிறகும் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை எனக் குறிப்பிட்ட அவர், தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் மீதே பாலியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகச் சாடினார். அதுமட்டுமன்றி, 148 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து சேவை போன்ற அறிவிப்புகள் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன என்றும் விமர்சித்தார்.

தோல்வி பயத்தால் கிராமம் கிராமமாகப் பிரசாரம்:

முதல்வர் விஜய்யின் தற்போதைய பிரசார உத்திகளைக் கடுமையான எள்ளலுடன் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், “பொதுத்தேர்தலின் போது 234 தொகுதிகளில் வெறும் 5 இடங்களுக்கு மட்டுமே சென்று பிரசாரம் செய்த முதல்வர் விஜய், இப்போது கிராமம் கிராமமாகத் தெருத்தெருவாக இறங்கிப் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமென்ன?” என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியால் ஏற்பட்டுள்ள தோல்வி பயமும் நடுக்கமுமே இதற்கு முதன்மையான காரணம் என்று கூறிய அவர், வெளியூர்களிலிருந்து ஆட்களை இறக்கி பிரசாரம் மேற்கொள்வதாகவும், ஓட்டுக்கு ₹6000 வரை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் சுமத்தினார்.

இதையும் படிக்க : பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்தியதாக புகார்.. உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப்பதிவு!!

‘INDIA’ கூட்டணி பற்றிய விமர்சனம்:

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், ‘INDIA’ கூட்டணியைக் கடுமையாக எள்ளி நகையாடினார். “இனிமேல் இதனை ‘INDIA’ கூட்டணி என்று அழைக்காதீர்கள்; ‘I.N.D.I.A’ கூட்டணி என்று மட்டும் சொல்லுங்கள்” எனக் குறிப்பிட்ட அவர், எத்தனை கூட்டணிகள் ஒன்றாக இணைந்தாலும் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும் செல்வாக்கையும் எவராலும் அசைக்கவோ நினைக்கவோ கூட முடியாது என்று அழுத்தமாகக் கூறினார். மேலும், “கையே இல்லாத பெண், நீரில்லாத குளத்தில் தண்ணி பிடிக்கப் போன கதை போலத்தான்” தவெகவின் தேர்தல் உத்திகளும் எதிர்க்கட்சிகளின் நிலைமையும் இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

Follow Us