முடிவுக்கு வந்த தேர்தல் பரப்புரை – தேர்தல் கட்டுப்பாடுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் தடை?
Bypoll Election Restrictions : தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6, 2026 அன்று மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 4, 2026 இன்று மாலை 6 மணியுடன் இடைத்தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
சென்னை, அக்டோபர் 4 : தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6, 2026 அன்று மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, இடது சாரிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனையடுத்து கடந்த 2 வாரமாக அரசியல் கட்சிகள் இந்த 2 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அக்டோபர் 4, 2026 இன்று மாலை 6 மணியுடன் இடைத்தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
எவற்றுக்கெல்லாம் தடை?
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில், மாலை 6 மணி முதல் தேர்தல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. தேர்தல் விவகாரங்களை சமூக ஊடகம், டிவி, ரேடியோவில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது. தொகுதிக்கு வெளியிலிருந்து வந்த கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் தொகுதியில் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் வரும் வழியில் போராட்டம் – நாதக வேட்பாளர் கைது – பரபரப்பு தகவல்
மேலும், பொதுக்கூட்டங்கள், பரப்புரை, மின்னணு சாதனங்கள் வழியே பரப்புரை மேற்கொள்ளக்கூடாது. இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் வாக்காளர் அல்லாத கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியாட்கள் உள்ளனரா என ஆய்வு செய்யப்படும். வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்சொன்ன விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும் அக்டோபர் 4, 2026 இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் நாளான அக்டோபர் 6, 2026 வரை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை அக்டோபர் 4, 2026 இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த பல்வேறு கட்சியினர் தங்களின் வாகனங்கள் மூலம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதனிடையே, வெளிமாவட்டத்தை சேர்ந்த ஆட்கள் தங்கும் விடுதிகளில் உள்ளார்களா என்பதை தேர்தல் ஆணையத்தின் சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் பரப்புரை முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. வாக்கு எந்திரங்களை வாக்குச்சாவடிக்கு எடுத்துச்செல்லும் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அக்டோபர் 5, 2026 நாளை இரவுக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : “தேர்தலுக்காக மட்டும் மக்களை பார்க்க வரவில்லை!”.. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆக்ரோஷ பதிலடி!!
இதனையடுத்து அக்டோபர் 9, 2026 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில் காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவகெ ஆட்சியமைத்தது. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தல் வெற்றி தவெகவிற்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் மக்களிடம் தங்களுக்கு ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்கிறது.


