முதல்வர் விஜய் வரும் வழியில் போராட்டம் – நாதக வேட்பாளர் கைது – பரபரப்பு தகவல்
NTK Candidate Karthika Arrested : முதல்வர் விஜய் தாராபுரத்தில் வாகன பரப்புரை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாதகவினரை தடுத்து, வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நாம் தமிழர் கட்சியினரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாதக வேட்பாளர் காரத்திகா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர், அக்டோபர் 4 : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்கு அக்டோபர் 4, 2026 இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் விஜய் தாராபுரத்தில் வாகன பரப்புரை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாதகவினரை தடுத்து, வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் அவர்களை முதல்வர் விஜய் கடந்து சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் வரும் வழியில் போராட்டம் – நாதகவினர் கைது
தாராபுரம் தொகுதி மீனாட்சிபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல இருக்கும் பகுதியில் நாடக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அக்கட்சியினர் கொடியைக் காட்டி பரப்புரை மேற்கொண்டனர். இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அவர்களை வெளியேறக் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்வர் விஜய் வருவதால் அவர்கள் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டாக கூறப்படுகிறது. அப்போது நாம் தமிழர் கட்சியினர் சிலரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க : “பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு தகவல் கசிவு”.. கோவையில் கடற்படை மாலுமி கைது.. ஆந்திர போலீசார் நடவடிக்கை!!



இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நாதக வேட்பாளர் கார்த்திகா, நாங்கள் எங்களுடைய இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம். சாலை மறியல் செய்யவில்லை. முதல்வர் விஜய் வருவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே எங்களை அனுமதிக்கவில்லை. முதல்வர் விஜய் மட்டும் அரசியல் கட்சி நடத்தவில்லை நாங்களும் அரசியல் கட்சி நடத்துகிறோம். இவர் பரப்புரைக்கு வந்தால், நாங்கள் வரக்கூடாதா, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தாராபுரம் சட்டமன்ற தேர்தலே ஜனநாயக படுகொலை தான். வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவர்களையே போட்டியிட வைத்திருக்கிறார்கள் என்று பேசினார்.
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6, 2026 நடைபெறவுள்ள நிலையில் , அதற்கான பிரச்சாரம் அக்டோபர் 4, 2026 இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து 5 முனை போட்டி நிலவும் 2 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 09, 2026 அன்று நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க : ஒரே மேடையில் தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஎம்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
அந்த வகையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் அக்டோபர் 4, 2026 இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு வருகிறார். முன்னதாக கடந்த செப்டம்பர் 30, 2026 அன்று தான் தாராபுரத்தில் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதையடுத்து, தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரோடு ஷோ நடக்கிறது. தாராபுரம் பரப்புரையின்போது வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம் செய்தார். சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள தொண்டர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், முதலமைச்சரின் வருகையையொட்டி தாராபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.