AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக மைனாரிட்டி அரசுக்கு தக்க பதிலடி – தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்

EPS Strong Reply to TVK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துரோகத்திற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தவெக மைனாரிட்டி அரசுக்கு தக்க பதிலடி –  தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்
முதல்வர் விஜய் - எடப்பாடி கே பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Oct 2026 17:10 PM IST

சென்னை, அக்டோபர் 4 : தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டிகள் காரணமாக தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 4, 2026 இன்றுடன் பரப்புரை முடிவுக்கு வருகிறது.

தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துரோகத்திற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க : பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்தியதாக புகார்.. உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப்பதிவு!!

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தவெக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து, ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுக சார்பில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரத்தை நடத்தி, வாக்களித்த விரல் மை காய்வதற்குள் ஒருசில துரோகிகள், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கும், வாக்களித்த மக்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்தவர்களே, தற்போது தவெக. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இந்த துரோகிகளுக்கு தொகுதி முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை வலைதளங்களிலும், ஊடகங்களிலும் நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இதையும் படிக்க : “பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு தகவல் கசிவு”.. கோவையில் கடற்படை மாலுமி கைது.. ஆந்திர போலீசார் நடவடிக்கை!!

த.வெ.க-வினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், தவறான வழியில் ஈடுபட்டும், வாக்காளப் பெருமக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். கழகத்தின் வெற்றிக்கு துரோகம் இழைத்து, த.வெ.க. சார்பில் போட்டியிடும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

மேலும் அவர் தனது அறிக்கையில், தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக உள்ளனர். துரோகத்திற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள்” என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்கிறேன் என்றார்.

Follow Us