AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!

Instagram Celebrity Madhumitha : நாகர்கோவிலில் இன்ஸ்டாகிராமில் நகை மற்றும் பணத்துடன் ரீல்ஸ் வெளியிட்டு வரும் பிர பல யூடியூபர் மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் நகை திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!
பிரபல யூடியூபர் மதுமிதா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Oct 2026 14:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்து வரும் மதுமிதா என்பவர் மீது போலீசார் நகை திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் தொழிலதிபர் வினோத்குமார். இவரது மனைவி மதுமிதா. இவர்கள் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகின்றனர். இவர், பிரபல யூடியூபராக விளங்கிவரும் நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்துள்ளார். இதில், பல்வேறு மிதமான உடைகள், நகைகள அணிந்தவாறும், கட்டு கட்டாக பணத்துடன் இருப்பது போலவும், பண மழையில் நனைவது போலவும் ரீல்ஸ் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24- ஆம் தேதி மதுமிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 118 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

நகை, பணத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட பெண்

இந்த சம்பவத்தை தொடர்ந்தும், மதுமிதா மீண்டும் நகை மற்றும் பணத்துடன் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், மதுமிதா மீது 5 பவுன் தங்க நகையை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்டம், கே. டி. சி. நகர் பகுதியில் வசித்து வருபவர் பேச்சிமுத்து. கட்டிட ஒப்பந்ததாரர். இவர், பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, அங்கு, யூடியூபர் மதுமிதா அறிமுகமானதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் புதிய விதிகள் என்னென்ன?.. முழு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கட்டட ஒப்பந்ததாரரின் 5 பவுன் நகை மாயம்

அதன்படி, கடந்த 2022- ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சு முத்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மதுமிதா அவரது வாகனத்தில் ஏறி பயணம் செய்ததாக தெரிகிறது. பின்னர், மதுமிதாவை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு பேச்சிமுத்து வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டட ஒப்பந்ததாரர் பேச்சு முத்து மதுமிதா மீது நகை திருட்டு புகார் அளித்தார்.

பிரபல பெண் யூடியூபர் மீது நகை திருட்டு வழக்கு

அந்த புகாரின் அடிப்படையில், ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படும் நிலையில், மேல் நடவடிக்கைக்காக இந்த வழக்கு நெல்லை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, நகை, பணத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட மதுமிதா வீட்டில் 118 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் மீதே நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

மேலும் படிக்க: கோவை விமான நிலையத்தில் சிக்கிய மர்ம ட்ரோன்.. முதல்வர் வருகை தந்த நேரத்தில் அதிர்ச்சி!!

Follow Us