AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை ரயில்வே கோட்டத்தில் 16 சுரங்கங்கள்.. தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!

16 Tunnels Completed In Chennai Railway Division | சென்னையில் பொதுமக்களுக்கான மிக முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து உள்ளது. அதனை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதியதாக 16 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 16 சுரங்கங்கள்.. தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Oct 2026 07:50 AM IST

சென்னை, அக்டோபர் 05 : சென்னை ரயில்வே கோட்டத்தில் (Chennai Railway Division) 16 சுரங்கப்பாதைகளை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவை முடிவு பெற்றுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே (Southern Railway) சென்னை கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை பணிகள்

ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் 2025 – 2026 நிதியாண்டில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 11 ரயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டு, அந்த பகுதிகளில் சுரங்கப்பாதைகள் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டன. அந்த சுரங்கப்பாதைகள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : 8 மணி நேர மின் வெட்டு?- முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள்!

மேலும் 5 சுரங்கப்பாதைகள் அமைப்பு

இதேபோல 2026 – 2027 அதாவது, நடப்பு நிதியாண்டிலும் 5 ரயில் நிலையங்களில் இருந்த கேட்டுகள் அகற்றம் செய்யப்பட்டு சுரங்கப்பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு, அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் ஒவ்வொன்றும் சுமார் தலா ரூ.8 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த தேர்தல் பரப்புரை – தேர்தல் கட்டுப்பாடுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் தடை?

மேலும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

இதுவரை 16 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மேலும் சில சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் திருமணி – லத்தேரி சாலை, சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் ரயில் நிலையங்களின் இடையே அதிகத்தூரிலும், அதே வழித்தடத்தில் திருவலாங்கோடு மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே மோசூர் சாலையிலும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அனைத்தும், சுரங்கப்பாதைகள் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us