Tamil Nadu Weather report: நாளை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
Tamil Nadu weather today : தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அக்டோபர் 9 வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் அக்டோபர் 5, 2026 நாளை 27 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 4 : தமிழகத்தில் அக்டோபர் 2026 நாளை 27 மாவட்டங்களில் ல இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவற்றில் 5 மாவட்டங்களில் கனமழைக்கும் வாயப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 5,2026 முதல் அக்டோபர் 9, 2026 தேதி வரை மாநிலத்தின் ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலைகொண்டுள்ளது. இதுதவிர, அதே பகுதியிலிருந்து வடகேரளம் வழியாக மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நீண்டுள்ளது. இவற்றின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “போனால் போகட்டும் போடா!”.. தவெக தலைமை மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தியா?.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!!




நாளை 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அந்த வகையில் அக்டோபர் 4, 2026 இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 5, 2026 மற்றும் அக்டோபர் 6, 2026 2 நாட்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 5, 2026 நாளை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அக்டோபர் 5, 2026 நாளை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அக்டோபர் 4, 2026 மற்றும் அக்டோபர் 5, 2026 இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்தியதாக புகார்.. உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப்பதிவு!!
வெப்பநிலையை பொறுத்தவரை அக்டோபர் 4, 2026 முதல் அக்டோபர் 08, 2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 4, 2026 இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.