AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. அடுத்தடுத்து 3 பேரை தூக்கிய எஸ்.ஐ.டி. குழு!

Gem Veeramani Case 3 Arrested : ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்கள், ஆவணங்களை எஸ்ஐடி குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. அடுத்தடுத்து 3 பேரை தூக்கிய எஸ்.ஐ.டி. குழு!
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Oct 2026 20:30 PM IST

தமிழகத்தில் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், ஜம் வீரமணியின் ஓட்டுனர்களான லாசர், பார்த்திபன், பாபு ஆகியோரை எஸ்.ஐ.டி. குழு அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரகசிய ஆபாச வீடியோ காட்சிகள், 8 செல்போன்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி மீது 4 வழக்குகள் பதிவு- எஸ்.ஐ.டி. குழு விசாரணை

ஏற்கனவே, ஜெம் வீரமணி மீது 4 வழக்குகள் பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2025- ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக புகார் வெளிவந்த நிலையில், அந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்காக போலீசாருக்கு ரூ. 70 கோடி ரொக்கம் கைமாற்றப்பட்டதாகவும், இதற்கான பணத்தை ஜெம் வீரமணிக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்கள் விற்கப்பட்டு தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க: வாழ்வாதாரம் இழக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்.. புதிய ரக வேஷ்டி- சேலைக்கு கூலி உயர்வு.. பெ. சண்முகம் வைத்த கவன ஈர்ப்பு கோரிக்கை!

சிறுமிகளை வன்கொடுமை செய்யும் வீடியோக்கள்

அத்துடன், சிறுமிகளை ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்யும் அவரது உதவியாளர் சாந்தியின் செல்போன்களில் இருந்து போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அத்துடன், ஜெம் வீரமணி தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையிலும் பல்வேறு ஆதாரங்கள், செல்போன்கள், பென் டிரைவ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதில், சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் எஸ்ஐடி குழு

அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எஸ். ஐ. டி. குழுவும் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க: தென்காசியில் பிரைவேட் வாட்டர் பால்ஸ் க்ளோஸ்.. சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி.. என்ன காரணம்..!

Follow Us