AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போராடிய செவிலியர்களை மின்சாரத்தைத் துண்டித்து கைது செய்வதா?.. “ரீல்ஸ் முதல்வர் பதில் சொல்வாரா?”.. கொந்தளித்த இபிஎஸ்!!

EPS Slams TVK Govt: அறவழியில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை நடத்தியுள்ள அராஜகம் கொடூரத்தின் உச்சம் என இபிஎஸ் ஆவேசமாக விமர்சித்துள்ளார். 'ரைமிங் வசனம்' பேசும் முதல்வர் இத நியாயப்படுத்துவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுவித்து, ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

போராடிய செவிலியர்களை மின்சாரத்தைத் துண்டித்து கைது செய்வதா?.. “ரீல்ஸ் முதல்வர் பதில் சொல்வாரா?”.. கொந்தளித்த இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Oct 2026 12:21 PM IST

சென்னை, அக்.06: தமிழகத்தில் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது காவல்துறை அடக்குமுறையையும் அராஜகப் போக்கையும் ஏவியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில், அமைதியான முறையில் அமைத்துப் போராடிய அவர்கள் மீது காவல்துறை மூலம் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுக்கட்டாகக் கைது.. காவல்துறையுடன் கடும் தள்ளுமுள்ளு!!

“ரைமிங் வசனமும் ரீல்ஸ் முதல்வரும்” – இபிஎஸ் தாக்கு:

“பாசிசம், பாயாசம்” என்று மேடைகளில் வெறும் ரைமிங் வசனங்களைப் பேசி அரசியல் செய்யும் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, போராடிய செவிலியர்கள் மீது இத்தகைய பாசிச அக்கிரமத்தை நடத்தியிருப்பதை இந்த ‘ரீல்ஸ் முதல்வர்’ எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இதே செவிலியர்களின் முன்னால் நின்று வாக்குறுதிகளைக் அள்ளி வீசிய அக்கட்சியின் நிர்வாகிகளும், இன்றைய அமைச்சர்களும் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு முற்றிலும் மாறாகச் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிகாரத்திற்கு வந்தவுடன் நிலைப்பாட்டை மாற்றுவதுதான் இவர்கள் பேசும் மாற்றமா என்றும் சாடியுள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சரின் மெத்தனப் போக்கு:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது போன்ற மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினால் கூட, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராகவே இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார் என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தங்களது சொந்தத் துறையைச் சேர்ந்த செவிலியர்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழலில், அதுகுறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமைச்சர் மெளனம் காப்பது ஏன் என்றும், செவிலியர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதை விட அமைச்சருக்கு அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: நள்ளிரவில் வெளியான சர்ச்சை வீடியோ.. கொந்தளித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா.. நடந்தது என்ன?

அரசுக்கு கடும் கண்டனமும் கோரிக்கைகளும்:

போராட்டம் நடைபெற்ற இடத்தில் மின்சாரத்தைத் துண்டிப்பது, பேச்சுவார்த்தை என்று பொய் கூறி அழைத்துச் சென்று செவிலியர்களைக் கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமான முறையிலேயே இந்த ‘ஆச்சரியக்குறி அரசு’ போராட்டத்தை அணுகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். எனவே, கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக்கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், செவிலியர்களுடன் ஜனநாயக ரீதியாக நேரில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளுக்குச் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us