AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுக்கட்டாகக் கைது.. காவல்துறையுடன் கடும் தள்ளுமுள்ளு!!

Police Arrest Nurses After Scuffle: சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற குழுவினர் கைது செய்யப்பட்டதாகக் கூறிப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், காவல்துறையினருக்கும் செவிலியர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுக்கட்டாகக் கைது.. காவல்துறையுடன் கடும் தள்ளுமுள்ளு!!
செவிலியர்கள் கைது
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Oct 2026 07:15 AM IST

சென்னை, அக்.06: பொது சுகாதாரத் துறையில் களப்பணியாளர்களாகவும் செவிலியர்களாகவும் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. மற்ற மாநிலங்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், பேச்சுவார்த்தைக்குச் சென்ற பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதாகப் பரவிய தகவலைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உண்ணாவிரத முடிவில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, காவல்துறையினர் செவிலியர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிய சம்பவம் சென்னை எழும்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.  தொடர்ந்து, அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

மேலும் படிக்க: திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம்:

தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது மாத ஊதியமாக ரூ.21,000 மட்டுமே பெற்று வரும் நிலையில், பிற மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இதே பணிக்கு சுமார் ரூ.45,000 வரை ஊதியம் வழங்கி வருவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, தங்களுக்கும் பிற மாநிலங்களுக்கு இணையான ஊதியத்தையும் ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற உரிமையையும் வழங்கிட வேண்டும் எனக் கோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே காலையிலிருந்தே செவிலியர்கள் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தைக் குழு கைது.. கொதித்தெழுந்த செவிலியர்கள்:

நாள் முழுவதும் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிப் பகுதியில், சுகாதாரத் துறையுடனும் தமிழக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் கோரிக்கைக் குழுவிலிருந்து 5 முக்கியப் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பேச்சுவார்த்தைக்குச் சென்ற 5 பேரையும் செல்லும் வழியிலேயே காவல்துறையினர் கைது செய்துவிட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், “எங்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல், பேச்சுவார்த்தைக்குச் சென்ற பிரதிநிதிகளையே கைது செய்தது நியாயமில்லை; அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் கூறி முழக்கமிட்டுப் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தினர்.

மைக்குகள் அகற்றம், காவல்துறையின் கெடுபிடி:

இதனிடையே, மாலை 5 மணியுடன் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிவடைந்துவிட்டதாகக் கூறி, உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், தமிழக அரசு சார்பில் உரிய உத்தரவாதம் அல்லது பதில் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனச் செவிலியர்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் நேரடியாக நடவடிக்கை இறங்கி, ஒலிபெருக்கி (மைக் செட்), மேடைக் கொட்டகை மற்றும் ஷாமியானா பந்தல்களை அதிரடியாகப் பிரித்து அகற்றிப் போராட்டக் களத்தைக் கலைக்க முயன்றனர்.

மேலும் படிக்க: நெல்லை அருகே சம்பவம்.. கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி.. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!

குண்டுக்கட்டாகக் கைது, பேருந்து சிறைப்பிடிப்பு:

காவல்துறையின் நடவடிக்கைக்குக் கட்டுப்படாமல் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் ஏற்றத் தொடங்கினர். அப்போது காவல்துறையினருக்கும் செவிலியர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளும் சலசலப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட செவிலியர்களை ஏற்றிச் செல்ல முயன்ற காவல் துறைப் பேருந்துகளின் முன்பாக மற்ற செவிலியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுப் பேருந்துகளைச் சிறைபிடித்தனர். இதனால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

Follow Us