Tamil Nadu Bypoll: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு இவ்வளவு குறைவா?
Madurantakam and Dharapuram Bypoll : மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு அக்டோபர் 6, 2026 மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அசம்பாவிதமின்றி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை, அக்டோபர் 6 : மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6, 2026 மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அசம்பாவிதமின்றி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9, 2026 அன்று எண்ணப்படுகின்றன.
மதுராந்தகம், தாராபுரம், புதுவை தட்டாஞ்சாவடி தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க : “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!




வாக்குப்பதிவு இவ்வளவு குறைவா?
தமிழகமே உற்றுநோக்கிய மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நிலவரப்படி மதுராந்தகத்தில் 85.90 சதவீதமும், தாராபுரத்தில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த 2026 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது, இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மதுராந்தகத்திலு் பொதுத்தேர்தலில் 93.22 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 85.90 சதவிகிதம் பதிவாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 7.32 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதே போல தாராபுரத்தில் பொதுத்தேர்தலில் 89.90 சதவிகிதம் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 80.31 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதனையடுத்தது சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது 9.59 சதவிகித புள்ளிகள் குறைந்துள்ளது. 2 தொகுதிகளையும் ஒப்பிடும்போது தாராபுரத்தில்தான் சரிவு அதிகம். இரு தொகுதிகளிலும் சேர்த்துப் பார்த்தால், பொதுத்தேர்தலில் இருந்த வாக்காளர் ஆர்வம் இடைத்தேர்தலில் சற்றுக் குறைந்திருப்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி, தட்டாஞ்சாவடிதொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 80.81 சதவிகிதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : வெற்றி பயணத்தால் காலியாக ஓடும் பேருந்துகள்.. குடும்பத்தை எப்படி ஓட்டுவது? மனக்குமுறலை கொட்டிய ஓட்டுநர்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டிகள் நிலவியது. இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்றிருந்தாலும் பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. இதனால் இந்த இடைத்தேர்தலில் வென்று தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் தமிழகத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் வருகிற அக்டோபர் 9, 2026 அன்று எண்ணப்படுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அக்டோபர் 9, 2026 பிற்பகலில் தெரிந்துவிடும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.