ஜெம் வீரமணி விவகாரம்: மானநஷ்ட வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி – அமைச்சர்கள் மேல்முறையீடு
DMK Defamation Suit : ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்கில் தெரிவித்த கருத்துகளுக்காக, தங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னை, அக்.7: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்கில் தெரிவித்த கருத்துகளுக்காக, தங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுவை அக்டோபர் 13, 32026 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
மானநஷ்ட வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி: அமைச்சர்கள் மேல்முறையீடு
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிமீது தொடர்ச்சியாக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் முந்தைய திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், அவர் தப்பிக்க வழிவிட்டதாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் தவெக ஐடி விங் இதே குற்றச்சாட்டை முன்வைத்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க : 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!




தமிழக அமைச்சர்களின் கருத்துகள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக அரசு மீது குற்றம்சாட்டிப் பேச இரு அமைச்சர்களுக்கும், தவெக ஐடி பிரிவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், ரூ.1 கோடியே 1 லட்சம் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
சமூக வலைதள நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமெரிக்காவிலும், தவெகவின் தலைமை அலுவலகம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர முன் அனுமதி வழங்கக் கோரி துரைமுருகன் தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, அமைச்சர்கள் இருவர் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக வழக்குத் தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க : ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!
இந்த நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே. முத்துகுமார் அடங்கிய அமர்வு முன் முறையிடப்பட்டது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இன்னும் தங்கள் கைக்குக் கிடைக்கவில்லை என்றும், அதற்குள்ளாகவே அமைச்சர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். நீதிமன்ற அனுமதி கிடைத்தாலும், மானநஷ்ட வழக்கை திமுக இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுவின் நகலைத் தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், அந்த மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை மானநஷ்ட வழக்கைத் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அமைச்சர்களின் மேல்முறையீட்டு வழக்கை அக்டோபர் 13, 2026 விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.