AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India Women Cricket: ஸ்மிருதி மந்தனா கேப்டன்.. ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

Smriti Mandhana Captain: பிசிசிஐ, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய மகளிர் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, ஸ்மிருதி மந்தனா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷஃபாலி வர்மா டி20 துணை கேப்டனாகவும், தீப்தி ஷர்மா ஒருநாள் துணை கேப்டனாகவும் பொறுப்பேற்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்குவது பெருமை என மந்தனா கூறியுள்ளார். முழு அணியின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

India Women Cricket: ஸ்மிருதி மந்தனா கேப்டன்.. ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஸ்மிருதி மந்தனா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Oct 2026 08:48 AM IST

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது. நேற்று அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி 3 வடிவங்களுக்குமான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவித்த நிலையில், வரவிருக்கும் தொடருக்கான அணி அதே நாள் இரவு தாமதமாக அறிவிக்கப்பட்டது. முந்தைய நாள் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் ஸ்மிருதி மந்தனாவும் கலந்துகொண்டிருந்தார். பிசிசிஐ ஸ்மிருதி மந்தனாவை (Smriti Mandhana) புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், ஷெஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: கேப்டனாக 10 ஆண்டுகள்.. குவிந்த பல சாதனைகள்.. ஹர்மன்ப்ரீத் கேப்டன்ஷி ரெக்கார்ட்ஸ்!

இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றது குறித்து ஸ்மிருதி மந்தனா கூறுகையில், “இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான கௌரவமாகும். பிசிசிஐ, தேர்வாளர்கள், எனது சக அணி வீரர்கள் மற்றும் எனது பயணம் முழுவதும் எனக்கு ஆதரவளித்து, என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தப் பொறுப்புடன் வரும் கடமையுணர்வை நான் புரிந்துகொள்கிறேன். அணியுடன் இணைந்து பணியாற்றி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல எனது சிறந்த பங்களிப்பை வழங்க ஆவலுடன் உள்ளேன்” என்று கூறினார்.

தீப்தி மற்றும் ஷெஃபாலி ஆகியோருக்கு துணை கேப்டன் பதவி:


ஸ்மிருதி மந்தனா ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் முழுநேர கேப்டனாக தனது பயணத்தைத் தொடங்குகிறார். அதே நேரத்தில், ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஷஃபாலி டி20 துணை கேப்டனாகவும், தீப்தி ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் டி20 அணி

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷெபாலி வர்மா (துணை கேப்டன்), நிக்கி பிரசாத், ஹர்மன்ப்ரீத் கவுர், அனுஷ்கா சர்மா, ரிச்சா கோஷ், கமாலினி, தீப்தி சர்மா, பிரேமா ராவத், ஸ்ரீ சரணி, நந்தனி சர்மா, கிராந்தி கவுர், அருந்ததி ரெட்டி, ஜிந்திமணி கலிதா, மின்னு மணி.

ALSO READ: இந்திய மகளிர் அணியின் அடுத்த கேப்டன் யார்? அடிபடும் ஸ்மிருதி மந்தனா பெயர்!

இந்திய மகளிர் ஒருநாள் போட்டி அணி

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, பிரதிகா ராவல், ஹர்மன்பிரீத் கவுர், ஹர்லீன் தியோல், தேஜல் ஹஸ்பானிஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), வைஷ்ணவி ஷர்மா, சாரனு, ரேணுகா தாக்கூர்.

Follow Us