Indian Women’s Cricket: இந்திய மகளிர் அணியின் அடுத்த கேப்டன் யார்? அடிபடும் ஸ்மிருதி மந்தனா பெயர்!
India Women's Captain: ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். உணர்வுப்பூர்வமான இம்முடிவுக்குப் பின்னும் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்தார். 2025 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர். இவருக்குப் பிறகு, துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தனது நீண்ட கால சர்வதேச அனுபவத்துடன் இந்திய மகளிர் அணியின் அடுத்த கேப்டனாகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது.
குவஹாத்தியில் பிசிசிஐ நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்கு ஒரு நாள் கழித்து, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) முடிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team) நேற்று அதாவது 2026 அக்டோபர் 5ம் தேதி ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கலந்துகொண்டனர். ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவிற்கு ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்து, கடந்த 2025ம் ஆண்டு இந்திய மகளிர் அணிக்கு முதல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.
ஹர்மன்பிரீத் கவுர், தான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடப் போவதாகவும், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்று அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி அறிவித்தார். இதுகுறித்து கவுர் எழுதியதாவது, “இந்த முடிவு எளிதானதல்ல. இதில் பல வருட நினைவுகள், உணர்ச்சிகள், தியாகங்கள் மற்றும் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் நிலைத்திருக்கும் தருணங்கள் அடங்கியுள்ளன.” என்று தெரிவித்திருந்தார்.
ALSO READ: ஐசிசி டி20 தரவரிசையில் புதிய வரலாறு.. உயர்ந்த மதிப்பீட்டு புள்ளியுடன் ஸ்ரீ சரணி முதலிடம்!




கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை எப்படி..?
ஹர்மன்பிரீத் கவுர் 155 டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி, 92 போட்டிகளில் வெற்றியும் 57 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில், ஹர்மன்பிரீத் கவுர் 51 போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி, 30 போட்டிகளில் வெற்றியும் 19 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதே கேப்டனாக அவரது மிகப்பெரிய சாதனையாகும்.
அடுத்த கேப்டன் யார்?
ஹர்மன்பிரீத் கவுருக்குப் பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கான போட்டியில் தற்போது துணை கேப்டனாக இருக்கும் ஸ்மிருதி மந்தனா முன்னணியில் உள்ளார். நீண்டகாலமாக இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் மந்தனா, நேற்று அதாவது 2026 அக்டோபர் 5ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ-யின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டம் நடந்த மறுநாளான இன்று 2026 அக்டோபர் 6ம் தேதி, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்தார்.
ALSO READ: ஆய்வுக்கூட்டத்துக்கு பின் திடீர் முடிவு.. இந்திய கேப்டன் பதவியை துறந்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஸ்மிருதி மந்தனாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
30 வயதான ஸ்மிருதி மந்தனா, 13 ஆண்டுகளுக்கு முன்பு 2013-ல் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். மந்தனா இந்திய அணிக்காக 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 57.88 சராசரியில் 5,411 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா 14 சதங்களையும் 35 அரை சதங்களையும் அடித்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில், ஸ்மிருதி மந்தனா இந்தியாவுக்காக 179 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் உட்பட 4,867 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஸ்மிருதி மந்தனா ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 788 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில், மந்தனா 2 சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். இந்தியாவின் அடுத்த கேப்டனாக வருவதற்கு ஹர்மன்பிரீத் கவுர் முன்னணியில் உள்ளார்.