AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தலைமை பொறுப்பில் 25 ஆண்டுகள்… டெல்லியில் விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

PM Modi : குஜராத் முதல்வர் தொடங்கி நாட்டின் பிரதமர் வரை பிரதமர் நரேந்திர மோடி, அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நாட்டிற்கு முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவையாற்றுவதற்கான உறுதியேற்றார்.  இதனை முன்னிட்டு, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக் கோயிலில் பிரதமர் மோடி அக்டோபர் 7, 2026 இன்று வழிபாடு மேற்கொண்டார்.

தலைமை பொறுப்பில் 25 ஆண்டுகள்… டெல்லியில் விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Oct 2026 08:56 AM IST

குஜராத் முதல்வர் தொடங்கி நாட்டின் பிரதமர் வரை பிரதமர் நரேந்திர மோடி, அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நாட்டிற்கு முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவையாற்றுவதற்கான உறுதியேற்றார்.  இதனை முன்னிட்டு, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக் கோயிலில் பிரதமர் மோடி அக்டோபர் 7, 2026 இன்று வழிபாடு மேற்கொண்டார். நாட்டிற்கான தனது சேவையை மேலும் அர்ப்பணிப்புடன் தொடர வேண்டும் என்ற உறுதியுடன் அவர் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, அரசு தலைமை பொறுப்பை ஏற்று அக்டோபர் 7, 2026 இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நீண்ட காலமாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் முதல் தலைவராக அவர் திகழ்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, அவர் முதன்முதலில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 25 ஆண்டுகளில் அரசின் உயர் பதவியில் அவர் இல்லாத ஒரு நாள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் – மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி விநாயகர் கோவிலில் வழிபட்ட பிரதமர் மோடி

 

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை முன்னிட்டு, டெல்லியின் சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் விநாயகப் பெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ஹரிஹரப் பெருமானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து, நாட்டு மக்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார். இதற்கிடையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் சேவா சங்கல்ப் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சேவை உறுதிமொழிச் சுடர் ஏற்றப்படும். நாடு முழுவதிலுமிருந்து ‘சேவா சங்கல்ப் யாத்திரை’யில் பங்கேற்றவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படிக்க : தலைநகரில் பிரதமர் மோடியின் மாஸ் என்ட்ரி.. சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பிரம்மாண்ட ரோடு ஷோ.. அதிரப்போகும் சென்னை!

அரசின் தலைமை பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், பிரதமர் மோடி வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த உரையாற்றவுள்ளார். நாட்டின் வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை அவர் இதில் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் சேவையே தனது அரசியல் பயணத்தின் அடிப்படை என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர், 25 ஆண்டுகால நிர்வாக அனுபவத்திற்குப் பிறகும், அதே அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கான தனது உறுதியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

Follow Us