ஹைதராபாத்தில் விமான நிலையத்தில் பயணியின் பையில் துப்பாக்கி குண்டு.. ஷாக் சம்பவம்!
Live Bullet Found in Passenger Bag | சம்சாபாத்தில் இருந்து அபுதாபிக்கு பயணம் செய்ய இருந்த பயணி ஒருவரின் பையில் இருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத், அக்டோபர் 06 : சம்சாபாத்தில் (Shamshabad) இருந்து அபுதாபிக்கு (Abu Dhabi) பயணம் செய்ய இருந்த பயணி ஒருவரின் பையில் இருந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி குண்டை கைப்பற்றிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பயணிகளை ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யும்போது, ஒரு பயணியின் பையில் துப்பாக்கி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பயணியின் பையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி குண்டு
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (Rajiv Gandhi International Airport) பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல பயணிகளை சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயணியின் பையில் துப்பாக்கி குண்டு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஒரு மசோதா சட்டமாவதற்கு முன்பு ஏன் மூன்று முறை வாசிக்கப்படுகிறது?




துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது?
அந்த துப்பாக்கி குண்டுக்கான முறையான ஆவணங்களை அந்த பயணி வழங்கவில்லை. அது குறித்து அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது, 2025 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ஆஸ்பர்ன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியை காணச் சென்றபோது தனக்கு அது கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததன் காரணமாக அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த துப்பாக்கி குண்டும் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மருந்து தயாரிக்கும் ஆலையில் பயங்கர விபத்து.. பாய்லர் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!