AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் – மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்

பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசுத் தலைமைப் பொறுப்பில் இருந்ததை பாராட்டி, மத்திய அமைச்சரவை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக நாட்டிற்கு முதலிடம், குடிமக்களுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பயணத்தை இந்தத் தீர்மானம் எடுத்துரைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் – மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Oct 2026 19:50 PM IST

பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசுத் தலைமைப் பொறுப்பில் இருந்ததை பாராட்டி, மத்திய அமைச்சரவை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக நாட்டிற்கு முதலிடம், குடிமக்களுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பயணத்தை இந்தத் தீர்மானம் எடுத்துரைக்கிறது.

குஜராத்திலிருந்து தொடங்கிய பயணம்

குஜராத்தில் தான் முன்னோடியாகச் செயல்படுத்திய வெற்றிகரமான நிர்வாக நடைமுறைகளை பிரதமர் மோடி நாடு முழுவதும் அமல்படுத்தினார். மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் ‘ஸ்வாகத் திட்டம் 2010-ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை விருதை வென்றது. அதே உணர்வின் அடிப்படையில், மத்திய அளவில் பிரகதி தளம் உருவாக்கப்பட்டது. குஜராத்தில் விவசாயத்திற்குத் தனியாக மின்சாரம் வழங்கிய ஜோதிகிராம் மாதிரி, நாடு முழுவதும் உள்ள விவசாயத் துறைக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

இதையும் படிக்க : தலைநகரில் பிரதமர் மோடியின் மாஸ் என்ட்ரி.. சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பிரம்மாண்ட ரோடு ஷோ.. அதிரப்போகும் சென்னை!

ஏழைகள் மீதான அக்கறை

வறுமையை நேரில் கண்டு, அதிலிருந்து மீண்டு வந்த பின்னணியைக் கொண்ட பிரதமர் மோடி, அந்த அனுபவத்தை மக்கள் நலத் திட்டங்களாக மாற்றினார். 60 கோடிக்கும் அதிகமான ஜன் தன்’ (Jan Dhan) வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டது, 4 கோடிக்கும் அதிகமான நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது மற்றும் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை மேற்கொண்டுள்ளார்.

விளிம்புநிலை மக்களுக்கான ஆதரவு

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் வளர்ச்சியில் பங்காளிகளாக்குவதே பிரதமர் மோடி அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. 3.5 கோடி பெண்கள்’லட்சபதிகளாக’ மாறியுள்ள நிலையில், பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் பெண்களுக்குச் சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது. பிஎம்-கிசான் ( திட்டத்தின் மூலம், ரூ. 4 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்களுக்கான உறுதியான அர்ப்பணிப்பு

அரசியல் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், நாட்டின் நலன் கருதி துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜிஎஸ்டி , நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்குதல் மற்றும் காலாவதியான காலனித்துவ காலச் சட்டங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் நிர்வாகத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

சுயசார்பு இந்தியா

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் மூலதனச் செலவு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் மற்றும் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு மின்னணு சாதன உற்பத்தித் துறை ரூ.2 லட்சம் கோடியிலிருந்து 13 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறையில் சாதனைகள்

சாதாரண மக்களுக்காக ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்ததுடன், யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதியும் இணைக்கப்பட்டதால் சாமானிய மக்களின் வாழ்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மற்றும் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது ஆகியவை பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

இதையும் படிக்க : அசாதாரண துணிச்சல் காட்டிய வீர விமானி: கேப்டன் ஸ்மித்தை பாராட்டிய பிரதமர் மோடி..

நெருக்கடியான காலங்களில் உறுதி

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பிரதமர் மோடியின் தலைமைத்துவம் நாட்டை ஒன்றிணைத்து, உள்நாட்டுத் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது.

தேசிய பாதுகாப்பு

2016 ஆம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ், 2019 ஆம் ஆண்டின் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்துர்’ போன்ற நடவடிக்கைகளின் மூலம் தேசிய பாதுகாப்பில் பிரதமர் தனது சமரசமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கம், ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியை உருவாக்குதல் ஆகியவை முக்கிய மைல்கற்களாக அமைந்தன.

உலக அரங்கில் உயரும் அந்தஸ்து

வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்துவதிலும், ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைவதை முன்னெடுப்பதிலும் இந்தியா முக்கிய பங்காற்றியது. பெருந்தொற்றுக் காலத்தில் பிரதமர் மோடியின் முன்னெடுப்பின் மூலம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு இந்தியா உறுதுணையாக நின்றது. 36 நாடுகள் பிரதமர் மோடிக்குத் தங்கள் உயரிய குடிமை விருதுகளை வழங்கியிருப்பது, அவரது தலைமைக்கு உலகளவில் அளிக்கப்படும் அங்கீகாரத்திற்கும் மதிப்பிற்கும் சான்றாகத் திகழ்கிறது.

Follow Us