தனது படத்தையே ட்ரோல் செய்து பேசிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ
Vignesh Shivan trolling his own film | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் நேற்று டாக்ஸிப் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது தனது சொந்த படத்தையே ட்ரோல் செய்தது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகம மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மாறாக தொடர் வெற்றியை சந்தித்து வந்த நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு இது ஒரு தோல்வி படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் டாக்ஸிக் பட விழாவில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.




தனது படத்தையே ட்ரோல் செய்து பேசிய விக்னேஷ் சிவன்:
அதன்படி நேற்று சென்னையில் டாக்ஸிக் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த டாக்ஸிக் படத்தில் நடித்து உள்ள நடிகை கியாரா அத்வானியை குறிப்பிட்டு பேசும் போது, கியாரா, எனக்கு உங்களை தெரியும். கபீர் சிங் படத்திற்கு முன்பே நான் உ க்களைச் சந்தித்து ஒரு திரைக்கதையை விவரித்திருக்கிறேன். அந்தப் படத்தை நான் இப்போது எடுத்துவிட்டேன். அதன் பெயர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. அந்தப் படத்தில் நீங்க நடிக்காமல் போனது உங்களுடைய அதிர்ஷ்டம் என்று மிகவும் கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VigneshShivan trolling his own #LIK Film😅:
“Kiara I know you. Before Kabir Singh I have met you and narrated one script. I made that Film now, it’s called Love Insecure Company. You are lucky, that you didn’t do that film” pic.twitter.com/low1kLgwKK
— AmuthaBharathi (@CinemaWithAB) August 24, 2026