AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

750 ஏசி பேருந்துகளை தொடங்கிவைத்த முதல்வர் விஜய் – டிக்கெட் எடுத்து பயணம்

CM Vijay Launche New AC Electric Buses : சென்னையில் பசுமை போக்குவரத்தை உக்குவிக்கும் வகையில் 750 மின்சார ஏசி பேருந்துகளை முதல்வர் விஜய் தலைமை செயலகத்தில் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த தாழ்தள பேருந்துகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் எளிதாக பேருந்தில் ஏறி இறங்க முடியும்.

750 ஏசி பேருந்துகளை தொடங்கிவைத்த முதல்வர் விஜய் – டிக்கெட் எடுத்து பயணம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Aug 2026 12:04 PM IST

சென்னை, ஆகஸ்ட் 25 : சென்னையில் 2வத கட்டமாக 750 ஏசி மின்சார பேருந்து சேவையை முதல்வர் விஜய் ஆகஸ்ட் 25, 2026 இன்று துவங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மினாசர பேருந்துகளை துவக்கி வைத்தார். மேலும் இந்த பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

750 ஏசி பேருந்துகளை தொடங்கிவைத்த முதல்வர் விஜய்

இந்த நிலையில் இந்த திட்டத்தின் 2வது கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த மின்சார பேருந்துகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பேருந்துகள் ஆலந்தூர், சென்டர்ல் பணிமனை 2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர், மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க : “கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!

கொடியசைத்து துவங்கி வைத்த முதல்வர் விஜய்

 

நிகழ்வின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மின்சார ஏசி பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநருடன் கலந்துரையாடினார். கண்டக்டரிடம் நலம் விசாரித்தார். இதனையடுத்து முதல்வர் விஜய் சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்தார். இது வைரலானது.

சென்னையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பசுமை போக்குவரத்தை உக்குவிக்கும் வகையிலும் இந்த ஏசி மின்சார பேருந்துகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தாழ்தள பேருந்துகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் எளிதாக பேருந்தில் ஏறி இறங்க முடியும். இந்த மின்சார பேருந்து இயக்கத்தின் மையமாக ஆலந்தூர் பணிமனை செயல்படவுள்ளது. இதற்காக இந்த ஆலந்தூர் பணிமனை ரூ.30.43 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன

இதையும் படிக்க : தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி? – அமைச்சர் விளக்கம்

மேலும் மின்சாரப் பேருந்துகளுக்கு விரைவாக சார்ஜ் செய்யும் வகையில் பிரத்யேக உயர் திறன் கொண்ட சார்ஜிங் பேக்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பேருந்துகளை முறையாக பராமரிக்கவும், பழுதுநீக்கவும் தானியங்கி முறையில் இயங்கும் பராமரி்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆலந்தூர் பணிமனையைத் தொடர்ந்து 2வதுகட்ட மின்சார பேருந்துகளின் சேவைகள் சென்னையில் மேலும் 6 பனிமணைகளுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளன. சென்ட்ரல் வொர்க்ஷாப், பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர், ஐயப்பன் தாங்கல் ஆகிய பணிமனைகளில் விரிவுபடுத்தப்படவுள்ளன.

Follow Us