AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடோடி வருவான் ஆயர்பாடி கண்ணன்: நெஞ்சை அள்ளும் கோகுலாஷ்டமி!

Krishna Janmashtami: தர்மத்தைக் காக்க ஆவணி மாத அஷ்டமி திதியில் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம். வீடுகளில் குழந்தை கண்ணனின் பாதங்களை வரைந்தும், அவல், வெண்ணெய், சீடை போன்ற பலகாரங்களைப் படைத்தும் மக்கள் பக்திப் பெருக்குடன் வழிபடுகின்றனர்.

ஓடோடி வருவான் ஆயர்பாடி கண்ணன்: நெஞ்சை அள்ளும் கோகுலாஷ்டமி!
ஆயர்பாடி கண்ணன்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Aug 2026 12:01 PM IST

பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. பூவுலகில் தர்மத்தை நிலைநாட்டவும் அநீதியை அழிக்கவும் ஆவணி மாத அஷ்டமி திதியில் கண்ணன் அவதரித்தார். இந்நாளில் வீடுகளின் வாசலிலிருந்து பூஜை அறை வரை குழந்தை கிருஷ்ணரின் பாதச் சுவடுகளை அரிசி மாவால் வரைந்து வரவேற்பது சிறப்பு அம்சமாகும். கிருஷ்ணருக்குப் பிடித்த வெண்ணெய், அவல், சீடை மற்றும் முறுக்கு போன்ற பலகாரங்கள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து மகிழ்வது இவ்விழாவிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. தமிழகத்தில் உறியடி உற்சவமும், வடமாநிலங்களில் ‘தகி அண்டி’ என்ற தயிர் பானை உடைக்கும் போட்டியும் கோலாகலமாக நடைபெறுகின்றன. மக்கள் மத்தியில் பக்தி, மகிழ்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் உன்னதத் திருவிழாவாக இது திகழ்கிறது.

அவதாரப் பின்னணியும் ஆன்மீக முக்கியத்துவமும்

பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகிய ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளே கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. துவாபர யுகத்தில் பூவுலகில் தர்மத்தை நிலைநாட்டவும், அநீதியை அழித்து நன்மக்களைக் காக்கவும் ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் கூடிவரும் நாளில் கண்ணன் அவதரித்தார். மதுராவின் சிறைச்சாலையில் தேவகி – வசுதேவ தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர், அசரீரியின் கட்டளைப்படி இரவோடு இரவாகக் கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதா மற்றும் நந்தகோபரின் பராமரிப்பில் வளர்ந்தார். இந்நாளைத் தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்றும், வடமாநிலங்களில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்றும் பக்திப் பெருக்குடன் அனுசரிக்கின்றனர்.

வீடுகள்தோறும் தொடரும் பாரம்பரிய வழிபாடுகள்

கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளும் திருக்கோவில்களும் தூய்மை செய்யப்பட்டு, வண்ணமயமான மலர்களாலும் மாவிளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் பிரதான வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தை கிருஷ்ணரின் சின்னஞ்சிறு பாதங்களை அரிசி மாவினால் கோலமிட்டு வரைவது இதன் முக்கியச் சிறப்பம்சமாகும். சிறு குழந்தை வடிவில் கிருஷ்ணரே நேரடியாகத் தங்கள் இல்லத்திற்கு எழுந்தருளுகிறார் என்ற நம்பிக்கையில் இச்சடங்கு செய்யப்படுகிறது. மேலும், கண்ணனுக்கு மிகவும் உகந்த வெண்ணெய், நாவற்பழம், அவல், முறுக்கு, சீடை மற்றும் தட்டடை உள்ளிட்ட பலகாரங்களைப் படைத்து, தூப தீபங்கள் காட்டி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

Also Read: ருத்ராட்சம் கைகளில் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை என்ன? ஆன்மிகம் சொல்வது இவைதான்!

சமூக ஒற்றுமையை வளர்க்கும் உறியடி உற்சவம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்திச் சொற்பொழிவுகள், பஜனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுகின்றன. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு உலா வருவது விழாவிற்கு மேலும் பொலிவு சேர்க்கிறது. தமிழகக் கோவில்களில் ‘உறியடி விழா’ கோலாகலமாக நடத்தப்படும் அதேவேளையில், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில் ‘தகி அண்டி’ என்ற பெயரில் இது பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இளைஞர்கள் ஒன்று கூடி மனிதப் பிரமிடுகளை அமைத்து உயரத்தில் தொங்கும் தயிர் பானையை உடைக்கும் காட்சி காண்போரைக் பரவசப்படுத்துகிறது. மக்கள் மனதில் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் விதைக்கும் நாளாக இத்திருவிழா திகழ்கிறது.

Follow Us