Tamil Nadu Rains: வானிலை மையம் எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
Tamil Nadu weather today : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 26, 2026 இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 26 : தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 26, 2026 இன்று தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் பிற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை வருகிற ஆகஸ்ட் 31, 2026 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..




இதன் காரணமாக ஆகஸ்ட் 26, 206 இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல், பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 26, 2026 மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்யுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், ஆகஸ்ட் 28, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி: முதலமைச்சர் விஜயை சந்தித்த விவசாயிகள்
ஆகஸ்ட் 29 முதல் 31, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.