ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரேசன் கடைகளில் சிறப்பு விரல் ரேகை பதிவு முகாம்!
Ration Card Fingerprint Registration Camp: சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் ரேசன் அட்டைகளின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில், தவறாது பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளில் இ. கே. ஒய். சி. பதிவு சிறப்பு முகாம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) ஆகஸ்ட் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் கூறியிருப்பதாவது: சென்னையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் விரல் ரேகையை கட்டாயம் ரேசன் கடைகளுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை விரல் ரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாய விலை கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய வேண்டும்
அரசு சார்பில் நடத்தப்படும் இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகையை பதிவை விடுதல் இன்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் கொடுத்தவுடன் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இதில், முறைகேடு நிகழ்வதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஸ்மார்ட் கார்டுகள் மாற்றப்பட்டன. அந்த அட்டைகள் ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு இயந்திரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யை நம்பினால் நிச்சயம் பலன் உண்டு.. அமைச்சர் என். ஆனந்த்!




குடும்ப உறுப்பினர் விவரம் புதுப்பிப்பதற்காக
இதிலும், முறைகேடு நிகழ்வதாக புகார் எழுந்து வந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் நபர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, விரல் ரேகை பதிவு செய்த பின்னரே குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை புதுப்பிப்பதற்காகவும், ஒரு குடும்ப அட்டையில் உள்ள நபர் அந்த குடும்பத்தில் இருக்கிறார் என்பதை உறுதி செய்வதற்காகவும் விரல் ரேகை பதிவு செய்வதை அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் நடக்கும் சிறப்பு முகாம்
அதன் அடிப்படையில், ரேஷன் அட்டைதாரர்கள் விரல் ரேகையை பதிவு செய்து வந்த நிலையில், பலர் தங்களது விரல் ரேகையே பதிவு செய்யாமல் விட்டிருந்தனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக சென்னை மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட கூலிப்படை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!