AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இடைத்தேர்தல் தடைக்கு எதிராக விஜயபாஸ்கர்-கள் ஆக்சன்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு.. முழு விவரம்!

By Election Vijayabaskar Filed Petition: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு மீதான தடையை ரத்து செய்யக் கோரி சி. விஜயபாஸ்கர் மற்றும் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விசாரணை விரைவில் வர உள்ளது.

இடைத்தேர்தல் தடைக்கு எதிராக விஜயபாஸ்கர்-கள் ஆக்சன்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு.. முழு விவரம்!
விஜயபாஸ்கர்கள் அவசர மனு தாக்கல்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Aug 2026 19:52 PM IST

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 10- ஆம் தேதி தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தால், எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையும் எழுவதற்கு வாய்ப்பில்லை. அத்துடன் தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிற ஒரே காரணத்துக்காக, எம்எல்ஏக்கள் இல்லாமல் தொகுதி மக்களின் நீண்ட நாட்கள் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

5 தொகுதியில் வெற்றியை எதிர்த்து வழக்கு

அந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு மீதான தடையை நீக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை உள்ளிட்ட 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்த தொகுதியில் அவர்களது வெற்றியை எதிர்த்து பல்வேறு கட்சியினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது எனவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூலை 10- ஆம் தேதி குறிப்பிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவானது கடந்த ஜூலை 31- ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இந்த தடை உத்தரவை ஆகஸ்ட் 24- ஆம் தேதி வரை நீட்டித்து அண்மையில் உத்தரவிட்டது.

காலியாக உள்ள தொகுதிகள் எவை.. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள்

இதன் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில், திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், பெருந்துறையில் ஜெயக்குமார், தாராபுரத்தில் சத்தியபாமா, அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா, கரூரில் எம். ஆர். விஜயபாஸ்கர், விராலிமலையில் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், இந்த 7 தொகுதிகளில் வரும் காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தடைபட இதுவே மூல காரணம்.. உண்மையை போட்டுடைத்த ராகுல் காந்தி!

Follow Us