தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தடைபட இதுவே மூல காரணம்.. உண்மையை போட்டுடைத்த ராகுல் காந்தி!
Lok Sabha Opposition Leader Rahul Gandhi: தமிழக காங்கிரஸ் கட்சி உள்கட்சி பூசலே கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் தமிழக சுற்றுலாத் துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23- ஆம் தேதி தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் நிறைவானது இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 1- ஆம் தேதி) உடன் நிறைவடைந்தது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவது, தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். இதைத் தொடர்ந்து மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு அணிகளாக பிரிந்து செயல்படுவதே கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி செயல்பாடுகள் கண்காணிப்பு
தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் செயல்பாடுகளை டெல்லியில் இருந்து தலைமை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு கட்சியில் இனி இடம் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் கட்சியின் தலைமை வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!




காங்கிரஸ் கட்சியில் இனி இடம் இல்லை
காங்கிரஸ் கட்சியில் தவறு செய்பவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு இனி காங்கிரஸ் கட்சியில் இனி இடம் கிடையாது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் காங்கிரஸ் கட்சியில் இணைத்து, கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை ராகுல் காந்தி வழங்கி பேசியிருந்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் வேகமாக மாறியது.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க பல்வேறு முயற்சி
இதில், திமுகவுடனான 9 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அத்துடன், தவெக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் உயர்கல்வித்துறை ஆகிய இரு அமைச்சர் இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றது. இது மட்டும் இன்றி தவெக சார்பில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்பி இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு கட்சியின் தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “பாஜகவின் முதன்மை எதிரி தவெக தான்!”.. திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசமில்லை.. நயினார் நாகேந்திரன் சாடல்!