AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 4 மடங்கு மின் கட்டணமா? தவெக அரசுக்கு எதிராக சீறிய சீமான்!

Naam Tamilar Katchi Seeman Condemns : தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்து விட்டு அதிக மின் கட்டண ம் வசூலிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்தார் .

200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 4 மடங்கு மின் கட்டணமா? தவெக அரசுக்கு எதிராக சீறிய சீமான்!
சீமான்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Aug 2026 16:04 PM IST

தமிழகத்தில் அதிக மின் கட்டணம் வசூலித்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் நிகழ் மாதம் மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிராக பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இது பெரும் கண்டனத்துக்குரியதாகும். மின்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக தாமதமாக மின்சார அளவீடு செய்யப்பட்டுள்ளது. பலதான மின் அளவீட்டு கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

200 யூனிட் இலவச மின்சார பயன் கிடைப்பதை தடுக்க

200 யூனிட் இலவச மின்சாரத்தின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்காகவே திட்டமிட்டு தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. தாமதமாக செய்யப்பட்ட மின் அளவிட்டால் மின் பயன்பாடு 500 யூனிட்டுக்கு மேல் அதிகமான அதன் காரணமாக 200 யூனிட் இலவசம் மின்சாரத்தின் பலன் கிடைக்காமல் போய் உள்ளது. மேலும், ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின் கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின் கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான மின் கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணம் ஆகும்.

மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!

200 யூனிட் இலவச மின்சாரம் கண்துடைப்பு

தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் 2 மாதத்துக்கு 200 யூனிட் இலவசம் என்றும், அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது. இது போதாதென்று, தற்போதும் மின் கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தைவிட பன்மடங்கு மின் கட்டணம் உயரவும் காரணமாக உள்ளது பெரும் கண்டனத்துக்குரியது.

200 யூனிட் இலவச மின்சார அரசாணை

மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாக செயல்படுத்துவதும், மின் விளக்க அளவிட்டு கருவியை விரைந்து பொருத்துவது மட்டுமே இது போன்ற குளறுபடிகள் நடைபெறாமல் இருப்பதற்கு வழி முறையாகும். மக்கள் பயன்படுத்தும் மின் அளவுக்கான உண்மையான மின் கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும். எனவே, தமிழக அரசு பன்மடங்கு அதிகரித்த மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியின் படி, 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக விளங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. கிருஷ்ணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. தலைவர்கள் தீவிர ஆலோசனை!!

Follow Us