தமிழக 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!
Tamil Nadu By Elections: தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துரை, கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடுவதற்கான தடையை மேலும் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இடைத்தேர்தல் தள்ளி போக அதிக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், மேற்கண்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால், இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 10- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு ஜூலை 31- ஆம் தேதி வரை அறிவிப்பு வெளியிடக்கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு தடை நீட்டிப்பு
இந்த கெடு இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 31- ஆம் தேதியுடன்) நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை ஆகஸ்ட் 25- ஆம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!




தமிழக இடைத்தேர்தல் தள்ளி போக அதிக வாய்ப்பு
அதாவது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தற்போது, குறிப்பிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி போக அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
பதவிகளை ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் அந்த தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். இதேபோல, அதிமுகவை சேர்ந்த பெருந்துறை எம்எல்ஏ சிவகுமார், அம்பாசமுத்திரம் எம் எல் ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்எல்ஏ எம். ஆர். விஜயபாஸ்கர், கரூர் எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
நிலுவையில் இருக்கும் தேர்தல் வழக்குகள்
இவர்களது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க: மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய அரசுப் போக்குவரத்துக் கழக செயலி!