AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்.. முதல்வர் விஜய் வழங்கினார்!

CM Vijay Presented Medals: தமிழக காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார். இதில், யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்.. முதல்வர் விஜய் வழங்கினார்!
காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கிய முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 31 Jul 2026 16:46 PM IST

தமிழகத்தில் கடந்த 2024 மற்றும் 2025- ஆம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்திய காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்களை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஜோசப் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பங்கேற்றார். அவருக்கு தமிழக காவல்துறையில் உள்ள பல்வேறு படைப்பிரிவுகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்களை முதல்வர் ஜோசப் விஜய் ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கினார். தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் யார் யார்… இதில், யாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற அதிகாரிகள்

சைபர் கிரைம் டிஜிபி பால நாகதேவி, கோயம்புத்தூர் ஆணையர் என். கண்ணன், விஜிலென்ஸ் எஸ்.பி. கே. மீனா, ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், ஐ.ஜி.க்கள் லட்சுமி, மகேஸ்வரி, அணில் குமார் கிரி, சரவண சுந்தர், கே.ஏ. செந்தில் வேலன்.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு, காஞ்சிபுரம் எஸ். பி. எஸ். அரவிந்த், ஐ.ஜி. லோகநாதன், கே. எஸ். நரேந்திர நாயர், ஏ. ஜி. பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார், அபிநபுகள், டி.பி. சுரேஷ்குமார், எம். கிங்சிலின்.

மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. கைதிலிருந்து தப்பினார் செந்தில் பாலாஜி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள்

ஜெயலட்சுமி, எஸ். விமலா, ஆர். சுகாசினி சாஜிதா, தீயணைப்பு படையை சேர்ந்த ராமச்சந்திரன், மயில் ராஜு, புனித ராஜு, ராஜசேகர், அருளரசு ஜஸ்டின், அன்பு ஐபிஎஸ், மகேஷ் ஐபிஎஸ், என். சிலம்பரசன், செந்தில்குமார், அண்ணா பதக்கம்- ஜெயகரன், சி. ராஜ்குமார் நவராஜ் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் சீருடை பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு படைப்பிரிவுகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை

முன்னதாக தமிழக காவல்துறை, தீயணைப்பு துறை, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை, கமாண்டோ காவல் படை உள்ளிட்ட படைப்பிரிவுகள் சார்பில் பிரம்மாண்ட அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்… டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!

Follow Us