மேகதாது அணை விவகாரம்.. கிருஷ்ணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. தலைவர்கள் தீவிர ஆலோசனை!!
Mekedatu Dam Issue Krishnasamy: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்கவும், காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறக்க வலியுறுத்தியும் சென்னை தியாகராய நகரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை, ஆகஸ்ட் 01: காவிரி ஆற்றுப் படுகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் சூழலிலும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீட்டை வழங்க மறுத்து வரும் சூழ்நிலையிலும், அதனைக் கண்டித்துப் புதிய தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் சென்னையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில், புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தலைமையில் இந்த முக்கிய ஆலோசனை நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
முக்கிய அரசியல் கட்சிகள் பங்கேற்பு:
மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையிலான கட்சியின் மூத்த நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெயராமன், ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் திருமுருகன். இவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு விவசாயிகள், மீனவர் நல அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
மேகதாது அணையைத் தடுத்தல்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை எடாரி ஆக்கிவிடும் என்பதால், அந்த முயற்சியைச் சட்டப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
ஒப்பந்தப்படி தண்ணீர் திறப்பு:
ஆண்டுதோறும் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறந்துவிட மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தற்போதைய ஆளும் அரசு உரிய, கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கத் தவறிவிட்டது என்றும், அரசு போதிய அழுத்தம் கொடுக்காததால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, அடுத்தகட்டமாகக் கூட்டுப் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தின் இறுதியில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.