திடீர் வெள்ளம்.. நேபாள பிரதமரிடம் நிலைமையை விசாரித்த பிரதமர் மோடி
PM Modi spoke to Nepal PM Balen Shah: நேபாளத்தின் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியது. சீனப் பக்கத்தில் பனியாற்று ஏரி உடைந்திருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோஷி ஆற்றில் புதன்கிழமை காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள சந்தைகள், குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. திமுரே முதல் ஷாப்ருபேஷி வரையிலான பெரும் பகுதியை வெள்ள நீர் சூழ்ந்தது. 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சுமார் 300 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து, அந்நாட்டுப் பிரதமர் பாலன் ஷாவிடம் பிரதமர் மோடி பேசித் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பிரதமர் பதிவு
Spoke to Prime Minister Balendra Shah and conveyed condolences on the loss of lives due to the floods in Nepal. The people of India stand in solidarity with their sisters and brothers in Nepal at this difficult time.
India is ready to provide all possible humanitarian…
— Narendra Modi (@narendramodi) August 26, 2026
இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து பிரதமர் பலேந்திர ஷாவிடம் பேசி, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். இக்கடினமான சூழலில், நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்கிறார்கள். நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
நேபாள அரசின் கூற்றுப்படி, காலை 8:37 மணிக்கு அப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் பனிச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதற்கான காரணம் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
வெள்ளத்தால் ரசுவாவிலும், நுவாகோட் மற்றும் தாடிங் சுற்றியுள்ள பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் பலேந்திர ஷா தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டினார். பாதிக்கப்பட்டவர்களைத் தேடவும், மீட்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அவசரகால அமைச்சரவைக் கூட்டத்திலும் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பேரழிவிற்கான முக்கிய காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த மாபெரும் வெள்ளம் திடீரென எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது. சீனப் பக்கத்தில் உள்ள பனியாற்று ஏரி உடைந்தது இந்த வெள்ளத்திற்குக் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது