தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம்? என்ன நடந்தது.
Cauvery Water Dispute : தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நாளொன்றுக்கு 1.9 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நாளொன்றுக்கு 1.9 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம்?
கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. காவிரி நீரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் பிரச்னையின்றி சுமூகமாக பகிர்ந்துகொள்ள இந்த குழு அமைக்கப்ப்டது. குறிப்பாக இந்த குழு அவ்வப்போது கூடி தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பிரச்னைகளை தீர்த்து வருகின்றன.
இதையும் படிக்க : “பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்”.. ‘ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை’ vs ‘லாட்டரி மருமகன்’ வார்த்தை மோதலால் பரபரப்பு!




இதுவரை இந்த குழுவின் கூட்டம் 53 முறை நடந்துள்ளது. இதனையடுத்து 54வது முறையாக இந்த கூட்டம் ஆகஸ்ட் 25, டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் தமிழகத்தின் சார்பாக ளொன்றுக்கு 1.9 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மற்றொரு பக்கம் தண்ணீரின் இருப்பு மற்றும் திறக்கப்படும் அளவு ஆகியவை குறித்து கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் பரிந்துரைப்படி, வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இந்த நிலையில் நாளொன்றுக்கு 1.9 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 750 ஏசி பேருந்துகளை தொடங்கிவைத்த முதல்வர் விஜய் – டிக்கெட் எடுத்து பயணம்
முன்னதாக ஆகஸ்ட் 24, 2026 நேற்று நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 141வது கூட்டம் பதுடெல்லியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது. இக்குழுவின் உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.