மொபைல் போனால் வந்த சிக்கல்.. மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் விட்ட குடும்பம்.. சோக சம்பவம்!
3 Family Members Fell From Mountain | மகாராஷ்டிராவில் புதிய மொபைல் போன் கேட்டு அடம் பிடித்த இளைஞர், மலை உச்சியில் இருந்து கீழே குதித்த நிலையில், அந்த இளைஞரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, ஆகஸ்ட் 23 : மகாராஷ்டிராவில் (Maharashtra) புது மொபைல் போன் கேட்டு வீட்டில் தகராறு செய்த 19 வயது இளைஞர், மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்காக தாய் மற்றும் தந்தையும் உயிரிழந்துள்ளனர் என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைய்ல், மொபைல் போனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மொபைல் போனால் பறிபோன மூன்று உயிர்கள்
சத்ரபதி சம்பாஜி நகரின் ஜால்டா பாட்டா பகுதியை சேர்ந்தவர் முரளிதர் சந்த்குடே. 48 வயதான இருவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 19 வயதில் குணால் என்ற மகன் ஆகியோர் இருந்துள்ளனர். இந்த நிலையில், புது மொபைல் போன் வாங்கி தர வேண்டும் என குணால் தனது பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார். ஆனால், பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளைஞர், அருகில் உள்ள மலைக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு – பிரதமர் மோடி முதலிடம்




அடுத்தடுத்து குதித்து உயிரிழந்த மூன்று பேர்
மகன் மலைக்கு சென்ற நிலையில், அவரை சமாதானம் செய்ய பெற்றோரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் மலை உச்சியில் நின்றுக்கொண்டு இருப்பது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கீழே வலை விரித்து அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர்.
இதையும் படிங்க : காட்டுக்குள் போகாமலே சஃபாரி! இந்தூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் விர்ச்சுவல் உயிரியல் பூங்கா
மலையில் இருந்து குதித்து உயிர் விட்ட குடும்பம்
ஆனால் அதற்குள்ளாக குணால் கீழே குதித்துள்ளார். அதனை பார்த்த அவரது தந்தை, மகனை காப்பாற்ற கீழே குதித்துள்ளார். இருவரும் கீழே குதித்ததை கண்ட தாயும் கீழே குதித்துள்ளார். இதில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் மூன்று பேரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று குடும்பத்தினரும் பொதுமக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் கண் முன்னே அடுத்தடுத்து குதித்து உயிர் விட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.