AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 150 மணப்பெண்கள்.. மேலும் 300 பேர் காத்திருப்பு.. பின்னணி என்ன!

Pakistan Bride Arrived India : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அட்டாரி- வாகா எல்லை மூடப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து 150- க்கும் மேற்பட்ட திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் இந்தியா வந்தடைந்துள்ளனர். மேலும், 300 பெண்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 150 மணப்பெண்கள்.. மேலும் 300 பேர் காத்திருப்பு.. பின்னணி என்ன!
இந்தியா வந்த பாகிஸ்தான் திருமண பெண்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 24 Aug 2026 15:52 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வாகா எல்லை மூடப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த 150- க்கும் மேற்பட்ட மணப்பெண்கள் வர முடியாமல் இருந்த நிலையில், தற்போது அவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்த குடும்பங்கள் தங்கள் மகள்களுக்கு இந்தியாவில் திருமணம் செய்து வைக்க அட்டாரி- வாகா வழித்தடம் முக்கியம் வகித்து வந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் 22- ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 7- ஆம் தேதி இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கிய பிறகு அந்த நிலை மாறியது.

150 பாகிஸ்தான் பெண்கள் திருமணம் நிறுத்தி வைப்பு

இஸ்லாமாபாத்திற்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புது தில்லி பாகிஸ்தானிய பயணிகளுக்கான விசாக்களை கட்டுப்படுத்தியதுடன், எல்லைப் பாதைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக, நிச்சயிக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிந்தி பெண்களின் திருமணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள், இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இந்தியாவில் குடியேறுவதற்காக காத்திருந்தனர்.

மேலும் படிக்க:  மொபைல் போனால் வந்த சிக்கல்.. மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் விட்ட குடும்பம்.. சோக சம்பவம்!

திருமண பெண்கள் இந்தியா வர விசா அளிப்பு

தற்போது, திருமணங்களுக்காக சிந்திப் பெண்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இந்தியாவுக்கு வருகை தருவதற்கு மத்திய அரசு விசா வழங்கியுள்ளது. இதனால், அவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, நாக்பூரை சேர்ந்த சமூக தலைவர் ராஜேஷ் சாம்பியா கூறுகையில், மணப்பெண்களும், அவர்களது உறவினர்களும் மஸ்கட், இலங்கை, துபாய் உள்ளிட்ட பிற நாடுகள் வழியாக இடைவெளி பாதைகளில் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்றும், சிந்தி சமுதாயங்களை சேர்ந்த பெண்கள் இது போன்ற திருமணங்களுக்காக பஞ்சாபில் உள்ள வாகா- அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு வருவது வழக்கம் ஆகும்.

பாகிஸ்தானில் மேலும் 300 பெண்கள் காத்திருப்பு

அட்டாரி வழித்தடம் வழியாக நாட்டுக்கு வர திட்டமிட்டு இருந்த அனைவருக்கும் அரசு விசாக்களை நிராகரித்ததால் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அனைத்தும் மாறி உள்ளது. எல்லைகள் மூடப்பட்டு, மணப்பெண்களின் தலைவிதி குறித்து நிச்சயம் அற்ற நிலையில் இருப்பதால், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கியில் உள்ள ஷதானி தர்பாரின் ஆன்மீக தலைவரான ராய்ப்பூரை சேர்ந்த சந்த் யூதிஷ்டிர்லால் ஷதானியை ் அந்த அமைப்பு அணுகியதாக கூறினார். இது மட்டுமின்றி, பாகிஸ்தானில் மேலும் 300 பெண்கள் விசாவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: கண்கொள்ளாக்காட்சி.. மலைகளின் பள்ளத்தாக்குகள் வழியாக வந்தே பாரத்.. என்ன ரூட் இது?

Follow Us