IND vs SL: முன்னாள் கேப்டன் தோனியின் அதிக ரன்கள்.. குறைந்த போட்டியில் துரத்தி பிடித்த ரிஷப் பண்ட்!
Rishabh Pant Breaks MS Dhoni Record: வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,500 ரன்களை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். கொழும்பில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தியா – இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி (IND vs SL) கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ரிஷப் பண்ட் (Rishab Pant) தனது கடைசி 4 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 3 அரை சதங்களை அடித்துள்ளார். சிறப்பான ஃபார்மில் இருக்கும் இந்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பண்ட், தற்போது எம்.எஸ். தோனி வைத்திருந்த ஒரு வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார். இதுமட்டுமின்றி ரிஷப் பண்ட், இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுக்கும் பாதையில் உள்ளார். கொழும்பு டெஸ்டில் தனது 63 ரன்கள் இன்னிங்ஸின் போது ரிஷப் பண்ட், தோனியின் சாதனையை முறியடித்தார்.
ALSO READ: பேட்டிங் செய்யும்போது கையில் பட்ட பந்து.. பாதியில் வெளியேறிய ரிஷப் பண்ட்!
முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்:
வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,500 ரன்களை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். கொழும்பில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இந்த மைல்கல்லை எட்டினார். அவருக்கு முன்பு, வெளிநாட்டு அல்லது நடுநிலையான மைதானங்களில் விளையாடி மொத்தம் 2,496 ரன்கள் எடுத்திருந்த எம்.எஸ். தோனி, அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.




இந்தக் காலகட்டத்தில், ரிஷப் பண்ட் 42 என்ற சிறப்பான சராசரியில் ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் எம்.எஸ். தோனி வெறும் 32.84 என்ற சராசரியில் 2496 ரன்களைக் குவித்தார். இந்திய விக்கெட் கீப்பர்களின் இந்தப் பட்டியலில் ஃபரோக் இன்ஜினியர் 1209 ரன்களுடன் 3வது இடத்திலும், 4வது இடத்தில் உள்ள சையத் கிர்மானி வெளிநாட்டு மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1109 ரன்கள் எடுத்தும் உள்ளனர்.
சிறப்பாக செயல்படும் ரிஷப் பண்ட்:
இந்தியாவின் 28 வயதான நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று கை காயம் காரணமாக வெளியேறினார். இருப்பினும், இரண்டாம் நாளில் மீண்டும் களமிறங்கிய பண்ட், இலங்கை பந்துகளை பறக்கவிட்டு, 63 ரன்களை எடுத்தனர். ரிஷப் பண்ட் துருவ் ஜூரலுடன் இணைந்து 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ALSO READ: விராட் கோலியை ஓரம் கட்டிய சுப்மன் கில்.. 17 இன்னிங்ஸில் சாதனை!
எம்.எஸ். தோனியின் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பதற்கு ரிஷப் பண்ட் வெகு தொலைவில் இல்லை. தோனி தனது 90 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வாழ்க்கையில் 4876 ரன்கள் எடுத்தார், அதேசமயம், ரிஷப் பண்ட் இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 3725 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியைப் பொறுத்தவரை, ரிஷப் பண்ட் தோனியை விட வெகு முன்னிலையில் உள்ளார். தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 6 சதங்களையும் 33 அரைசதங்களையும் அடித்துள்ளார். ரிஷப் பண்ட் ஏற்கனவே இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் தற்போது 8 சதங்களையும் 21 அரைசதங்களையும் தன்வசம் வைத்துள்ளார்.