AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: அதிக வயதில் இந்திய அணிக்காக அறிமுகம்.. சிறப்பு பட்டியலில் இணைந்த சரன்ஷ் ஜெயின்!

Saransh Jain Debut: சரன்ஷ் மத்தியப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் விளையாடுகிறார். இவர் இதுவரை 54 முதல் தரப் போட்டிகள், 47 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 85 முதல் தர இன்னிங்ஸ்களில், 2 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் உட்பட, 31.75 சராசரியில் 2223 ரன்கள் எடுத்துள்ளார்.

IND vs SL: அதிக வயதில் இந்திய அணிக்காக அறிமுகம்.. சிறப்பு பட்டியலில் இணைந்த சரன்ஷ் ஜெயின்!
சரன்ஷ் ஜெயின்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Aug 2026 18:02 PM IST

சுழற்பந்து ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின், கொழும்பில் இலங்கைக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் (IND vs SL) இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 23ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் 33 வயதான சரன்ஷ் ஜெயின் அறிமுகப் போட்டியாக அமைந்தது. இது அவரது டெஸ்ட் மற்றும் சர்வதேச அறிமுகம் ஆகிய இரண்டிலும் முதல் போட்டியாகும். 28 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்து, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்காக (Indian Cricket Team) டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிக வயதான வீரர் என்ற பெருமையை சரான்ஷ் பெற்றார்.

சரன்ஷ் ஜெயின் தனது 33 வயது மற்றும் 145 நாட்களில் அறிமுகமானார். இதற்கு முன்னர், ராபின் சிங் 1998-ஆம் ஆண்டு தனது 35 வயது மற்றும் 23 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம், 21-ஆம் நூற்றாண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான மிகவும் வயதான பேட்ஸ்மேன் என்ற பெருமையை சரன்ஷ் ஜெயின் பெற்றார்.

ALSO READ: களத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் – அசிதா.. பிரித்துவிட்ட வீரர்கள்.. என்ன நடந்தது?

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிகவும் அதிக வயதுடைய வீரர்கள்:

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிகவும் வயதான வீரர் என்ற சாதனையை ருஸ்தம்ஜி ஜம்ஷெட்ஜி படைத்துள்ளார். ருஸ்தம்ஜி ஜம்ஷெட்ஜி தனது 41 வயது மற்றும் 27 நாட்களில் அறிமுகமானார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அறிமுகம் 1933 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக அமைந்தது.

இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 5 மிக அதிக வயதுடைய வீரர்கள்:

  • ருஸ்தோம்ஜி ஜம்ஷெட்ஜி – 41 ஆண்டுகள் மற்றும் 27 நாட்கள்
  • கோட்டார் ராமசுவாமி – 40 ஆண்டுகள் மற்றும் 39 நாட்கள்
  • ஆமிர் இலாஹி – 39 ஆண்டுகள் மற்றும் 102 நாட்கள்
  • கேகி தாரபோர் – 37 ஆண்டுகள் மற்றும் 329 நாட்கள்
  • ராபின் சிங் – 35 ஆண்டுகள் மற்றும் 23 நாட்கள்
  • சரன்ஷ் ஜெயின் – 33 ஆண்டுகள்

சரன்ஷ் ஜெயினின் தொழில் வாழ்க்கை


சரன்ஷ் மத்தியப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் விளையாடுகிறார். இவர் இதுவரை 54 முதல் தரப் போட்டிகள், 47 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 85 முதல் தர இன்னிங்ஸ்களில், 2 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் உட்பட, 31.75 சராசரியில் 2223 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அனைத்து வடிவங்களிலும் 97 இன்னிங்ஸ்களில் 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த போட்டிப் பந்துவீச்சு 9/71 ஆகும்.

ALSO READ: இரண்டாவது டெஸ்டிலும் சதம்.. சாதனையை சட்டை பையில் போட்ட படிக்கல்!

லிஸ்ட் ஏ தொடரில் 35 இன்னிங்ஸ்களில் அவர் 553 ரன்கள் எடுத்தார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 56 ஆகும். பந்துவீச்சில் 45 இன்னிங்ஸ்களில் சரன்ஷ் ஜெயின் 38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 டி20 இன்னிங்ஸ்களில், சரன்ஷ் 17 இன்னிங்ஸ்களில் 37 ரன்கள் எடுத்து 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Follow Us