IND vs SL: இரண்டாவது டெஸ்டிலும் சதம்.. சாதனையை சட்டை பையில் போட்ட படிக்கல்!
Devdutt Padikkal Century: 2018-19 ஆம் ஆண்டு முதல், எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற இரண்டு தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததில்லை. படிக்கலுக்கு முன்பு, 2018-19 பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சேதேஷ்வர் புஜாரா இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
கொழும்பில் இலங்கைக்கு (IND vs SL) எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தேவ்தத் படிக்கல் வரலாறு படைத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 166 பந்துகளில் தனது சதத்தை எட்டினார் தேவ்தத் படிக்கல். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது இரண்டாவது சதமாகும். முன்னதாக, காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் படிக்கல் 167 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக (Indian Cricket Team) மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ஒருவர் தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகின்றன. தேவ்தத் படிக்கலுக்கு முன்பு, சேதேஷ்வர் புஜாரா இந்தியாவுக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ALSO READ: இன்னும் 8 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே.. இந்திய அணியால் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுமா?




தொடரும் சத சாதனை:
🔙 to 🔙 Tons 🙌
Devdutt Padikkal is in sublime form 💪
Updates ▶️ https://t.co/r9FgXSdsMf#TeamIndia | #SLvIND pic.twitter.com/XheejG2Cuj
— BCCI (@BCCI) August 23, 2026
3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த படிக்கலுக்கு கிடைத்த வாய்ப்பை தேவ்தத் படிக்கல் சரியாக பயன்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து, சிங்கள ஸ்போர்டா கிளப்பில் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்து, 90 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதற்கிடையில், படிக்கல் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ச்சியாக, 3வது செஸனில் படிக்கல் தனது அரைசதத்தை சமமாக மாற்றினார். படிக்கல் இந்தத் தொடரில் ஏற்கனவே 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் படிக்கல் 167 மற்றும் 44 ரன்கள் எடுத்தார்.
2018-19 ஆம் ஆண்டு முதல், எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற இரண்டு தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததில்லை. படிக்கலுக்கு முன்பு, 2018-19 பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சேதேஷ்வர் புஜாரா இந்தச் சாதனையை நிகழ்த்தினார். புஜாரா மெல்போர்ன் டெஸ்டில் 106 ரன்களும், சிட்னியில் 193 ரன்களும் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ALSO READ: களத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் – அசிதா.. பிரித்துவிட்ட வீரர்கள்.. என்ன நடந்தது?
படிக்கல் டெஸ்ட் வாழ்க்கை:
தேவ்தத் படிக்கல் கடந்த 2024ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளின் 6 இன்னிங்ஸ்களில் 350 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்கள் மட்டுமின்றி, அவர் ஒரு அரை சதமும் அடித்துள்ளார்.
படிக்கல் இதுவரை 58 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 96 இன்னிங்ஸ்களில் சுமார் 45 சராசரியில் 4,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும், அவர் 11 சதங்களையும் அடித்துள்ளார்.