AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: சண்டையிட்ட விவகாரம்.. ஜெய்ஸ்வால் – அசிதாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Yashasvi Jaiswal - Asitha Fernando Incident: போட்டியின் முதல் நாள், முதல் இன்னிங்ஸின் 17வது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இலங்கையின் அசிதா பெர்னாண்டோ, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவை நோக்கி நகர்ந்தபோது, ​​இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

IND vs SL: சண்டையிட்ட விவகாரம்.. ஜெய்ஸ்வால் – அசிதாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Aug 2026 16:17 PM IST

கொழும்பில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் (Yashasvi Jaiswal) இலங்கையின் அசிதா பெர்னாண்டோவும் மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தில் அம்பயர் தலையிட்டார். இந்தச் சம்பவத்தை ஐசிசி தற்போது கவனத்தில் கொண்டு, இரு வீரர்களுக்கும் அபராதம் விதித்துள்ளது. இருப்பினும், இருவருக்கும் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: களத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் – அசிதா.. பிரித்துவிட்ட வீரர்கள்.. என்ன நடந்தது?

அபராதம் விதிப்பு:


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டம் தற்போது கொழும்பில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவும் போட்டிக்கு இடையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வீரர், வீரர் ஆதரவுப் பணியாளர்கள், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்தவொரு நபருடனும் முறையற்ற உடல் தொடர்பு கொள்வது தொடர்பான நடத்தை விதிகளின் பிரிவு 2.12-ஐ மீறிய செயல் என இந்தச் சம்பவத்தை ஐசிசி கண்டித்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு அவர்களின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமும், தலா ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்தது. கடந்த 24 மாதங்களில் இரு வீரர்களும் எந்தக் குற்றமும் செய்யாததால் இந்தத் தண்டனை மென்மையானது என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

போட்டியின் முதல் நாள், முதல் இன்னிங்ஸின் 17வது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இலங்கையின் அசிதா பெர்னாண்டோ, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவை நோக்கி நகர்ந்தபோது, ​​இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெர்னாண்டோ தனது தலையை ஜெய்ஸ்வாலை நோக்கி நீட்ட, ஜெய்ஸ்வால் குனிந்ததால் இருவரின் தலைகளும் மோதிக்கொண்டன. பின்னர் நடுவர் தலையிட்டு அவர்களைப் பிரித்தார். இரு வீரர்களும் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டதாகவும், எனவே இதுகுறித்து மேலும் விசாரணை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: முன்னாள் கேப்டன் தோனியின் அதிக ரன்கள்.. குறைந்த போட்டியில் துரத்தி பிடித்த ரிஷப் பண்ட்!

அரைசதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடத் தவறினார். ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 45 ரன்கள் மட்டுமே எடுத்து, 9 பவுண்டரிகளை அடித்தார். தொடரின் முதல் போட்டியிலும் ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவரால் இன்னும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை என்பது தெளிவாகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 32 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார்.

 

Follow Us