AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

Nepal Floods Reason : நே பாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கான காரணத்தை அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில், என்ன காரணம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வெள்ளத்தால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர் .

நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
நேபாள வெள்ளப்பெருக்கு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Aug 2026 19:05 PM IST

நேபாள நாட்டில் இன்று காலை திடீரென பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் உயிரிந்த நிலையில் இந்த வெள்ளப்பெருக்குக்கான காரணத்தை அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில்,  நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பனிப்பாறை ஏரி உடைப்பை காரணம் ஆகும். இதனால், நாராயணி, கண்டக் கரையோர மக்கள் தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . இந்திய எல்லைப் பகுதி கிராமங்களுக்கும் நேரடி ஆபத்து உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 40-க்கும் மேற்பட்ட சாலைகள், மேம்பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்கள் தனி தீவுகளாக துண்டிக்கப்பட்டுள்ளது.

106- க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு

சீன எல்லை அருகே உள்ள ரசவா மாவட்டத்தில் போதை கோஷியாற்றி இன்று காலை திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சுமார் 106- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. இந்த சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் நேபாள ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பேரழிவை ஏற்படுத்திய இந்த திடீர் வெள்ளப் பெருக்கத்திற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: இந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை.. நான் தான்.. மலேசியாவை சேர்ந்த பெண் பரபரப்பு வீடியோ!

பனியாற்று ஏரி வெடித்ததே இதற்கு காரணம்

அதில் தீபத்துக்கு அருகே உள்ள உயரமான பகுதிகளில் இருந்து உருவாகும் பனியாற்று ஏரி வெடித்ததன் காரணமாகவே இந்த கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காற்றாற்று வெள்ளம் வீடுகள் மற்றும் மேம்பாலங்கள், சாலைகள் ஆகியவற்றை அடித்து சென்றது. அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு அடியோடு சாய்ந்து அருகில் உள்ள கட்டிடத்தின் மீது விழுந்ததில் பெரும் உயிரிழப்புகள் நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்காத பாலம் ஒன்று தண்ணீரோடு அடித்து செல்லப்படுகிறது.

பேருந்துகள், கார்கள் அடித்து செல்லப்பட்டன

அது மட்டும் இன்றி, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளம் வருவதை பார்க்க பொதுமக்கள் சிதறி ஓடிய நிலையில், அவர்களையும் வெள்ளம் அடித்து சென்றது. இதனால், உயிர் இழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன.. பெரும் பரபரப்பு!

Follow Us