AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பசியால் தவித்த பன்றிக்குட்டிக்கு தாயாக மாறிய பசு மாடு.. ஆந்திராவில் சுவாரஸ்ய சம்பவம்!

Cow Feeds Starving Piglet In Andhra Pradesh | உலகில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பசியால் தவித்த பன்றிக்குட்டிக்கு பசுமாடு பால் கொடுத்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

பசியால் தவித்த பன்றிக்குட்டிக்கு தாயாக மாறிய பசு மாடு.. ஆந்திராவில் சுவாரஸ்ய சம்பவம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Aug 2026 07:21 AM IST

அமராவதி, ஆகஸ்ட் 27 : ஆந்திர பிரதேசத்தில் (AP – Andhra Pradesh) பசியால் தவித்த பன்றிக்குட்டிக்கு பசு மாடு ஒன்று பால் கொடுத்து தாய் போல அரவணைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை பிரிந்து பசியால் தவித்த பன்றிக்குட்டிக்கு, பசு மாடு தானே தாயாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாயை இழந்து பசியால் தவித்த பன்றிக்குட்டி

ஆந்திர பிரதேச மாநிலம், கர்நூல் மாவட்டம், வேல் துர்த்தி காவல் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் தான், இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டன் மிகுந்த அந்த பகுதியில், தாயை பிரிந்த பன்றிக்குட்டி ஒன்று பசியால் வாடி துடித்துள்ளது. பசியால் அங்கும், இங்கும் அலைந்துக்கொண்டு இருந்த பன்றிக்குட்டியை அங்கிருந்தவர்கள் பரிதாபமாக பார்த்துள்ளார்.

இதையும் படிங்க : நேபாளத்தை திருப்பி போட்ட பெரு வெள்ளம்.. சிக்கிய தமிழர்களின் விவரம்..!

தாயாக மாறி பால் ஊட்டிய பசு மாடு

ஆனால், அந்த பன்றிக்குட்டி உதவ யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் தான், அந்த பகுதிக்கு வந்த பசுமாடு தாயாக மாறியுள்ளது. அதாவது, பசியால் துடித்த பன்றிக் குட்டிக்கு அந்த பசு மாடு பால் கொடுத்துள்ளது. தாய்மை உணர்வு உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகுதியாவே இருக்கும். ஆனால், பன்றிக்குட்டியின் பசியை ஆற்ற, பசுமாடு தாயாக மாறிய சம்பவம் காண்போரை ஆச்சர்யத்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us