நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி பிழைத்த 21 பேரின் விவரம்- புகைப்படம்.. இந்திய வெளியுறவுத்துறை வெளியீடு!
Nepal Floods 21 People Details : நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த தமிழகத்தை சேர்ந்த 21 பேரின் புகைப்படங்கள், பெயர்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம் .
நேபாளம்- சீனா எல்லைப் பகுதியில் உள்ள தீபெத் மலையில் உள்ள பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் போதே கோஷி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் நேபாள ராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வெள்ளத்தில் தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 21 பேர் சிக்கிய நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பயணிகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
மேலும் படிக்க: நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..
வெள்ளத்திலிருந்து தப்பிய 21 தமிழர்கள் விவரம்
- சந்தியா- காஞ்சிபுரம்.
- வள்ளிநாயகி- திருச்சி.
- கிருபாகிரி- சிதம்பரம்.
- தியாகராஜன்- சிதம்பரம்.
- மைதிலி- சென்னை.
- விஜய புவனேஸ்வரி- சிதம்பரம்.
- நாவு கபீர் தாஸ்- சென்னை.
- முத்துக்குமரேசன்- சிதம்பரம்.
- சாந்தி- சிதம்பரம்.
- மாறன்- சிதம்பரம்.
- கற்பகம்- திருச்சி.
- சிவரஞ்சனி- திருச்சி.
- கலைமதி- சிதம்பரம்.
- பழனியப்பன்- சிதம்பரம்.
- ரகுநாதன்- சிதம்பரம்.
- பூங்குழலி- மயிலாடுதுறை.
- ரத்தினகுமார்- மயிலாடுதுறை.
- ராதை- சிதம்பரம்.
- கனகசபை- சிதம்பரம்.
- திருமாவளவன்- சிதம்பரம்
கும்பகோணம் டூர் நிறுவனம் மூலமாக சுற்றுலா
ஆகியோர் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 200- ஐ கடந்துள்ளது. இதில், 178 இந்தியர்கள் உள்பட 644 பேரை காணவில்லை என்று நேபாள நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து 2 குழுக்களாக நேபாள நாட்டுக்கு யாத்திரை சென்றுள்ளனர். கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் கைலாஷ் யாத்திரா நிறுவனம் மூலமாக 54 பேர் சென்றுள்ளனர்.




3 பேருந்தில் 2 பேருந்தை அடித்து சென்ற வெள்ளம்
இதில், 3 பேருந்துகளில் சென்றுள்ள அவர்களின் 2 பேருந்துகள் கடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில், 21 பேர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றன. இதே போல, சென்னையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், நேபாள நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் படிக்க: நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன.. பெரும் பரபரப்பு!