நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. டெல்லி விரையும் 4 அமைச்சர்கள்.. முதல்வர் விஜய் உத்தரவு!
Nepal Floods Ministers Visit Delhi : நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் தமிழர்கள் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் தமிழகத்தில் இருந்து 4 அமைச்சர்கள் டெல்லி செல்லுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார் .
நேபாள நாட்டில் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரங்களில் இருந்த கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண் இமைக்கும் நேரத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200- ஐ தாண்டி உள்ளது. இதில், ஏராளமான பொதுமக்கள் சிக்கி காணாமல் போய் உள்ளனர். இவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படைகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். இதில், தமிழகத்தை சேர்ந்த பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
4 அமைச்சர்கள் டெல்லி செல்ல முதல்வர் விஜய் உத்தரவு
இந்த நிலையில், நேபாள நாட்டு வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரண பணிகளை கண்காணிக்கவும், ஆஷிஷ் குமார் ஐஏஎஸ் தலைமையிலான குழுவை காத்மண்டுவுக்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். இதில், தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வினோத், ராஜ்மோகன், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். இது மட்டும் இன்றி நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
மேலும் படிக்க: நேபாள நாட்டு வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..




மீட்பு பணிகள்- நிவாரண பணிகள் கண்காணிப்பு
மேலும், இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 4 அமைச்சர்கள் டெல்லி நிறைய உள்ளனர். அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிப்பது, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கிய பின்னணி
தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைலாய யாத்திரைக்காக சென்றிருந்தனர். நேபாள நாட்டில் 3 பேருந்துகளில் அவர்கள் சென்றபோது, திடீரென கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேருந்தை அடித்து சென்றது. இதில், 1 பேருந்து மட்டும் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பியது. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: நேபாள நாட்டை திருப்பி போட்ட பெரு வெள்ளம்.. சிக்கிய தமிழர்களின் முழு விவரம்..!