பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி தெரிந்துகொள்வது?
தமிழக அரசுத் தேர்வுத்துறை 2026 ஆம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை ஜூலை 31, 2026 இன்று வெளியிட்டுள்ளது. துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எப்படி தெரிந்துகொள்வது என விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசுத் தேர்வுத்துறை 2026 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை ஜூலை 31, 2026 இன்று வெளியிட்டுள்ளது. துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் இந்த 2026 ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெற்றன. இந்த தேர்வுகளை 60,527 மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
மாணவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தங்களது முடிவுகளை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
- தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள Results என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- TN 12th Supplementary Result 2026 என்ற இணைப்பைத் தேர்வு செய்யவும்.
- பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைஉள்ளிடவும்.
- Submit கொடுத்தவுடன் ரிசல்ட் ஸ்கிரீனில் தோன்றும்
இதையும் படிக்க : மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய அரசுப் போக்குவரத்துக் கழக செயலி!




மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக் கொள்ளலாம். இணையதளத்துடன் சேர்த்து மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ், டிஜிலாக்கர், யுமாங் (UMANG) செயலி முலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும் விவரங்கள்
மதிப்பெண் பட்டியலில் மாணவரின் பெயர், பதிவு எண், பாட வாரியான மதிப்பெண்கள், செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள்
தேர்ச்சி நிலை ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்த பிறகு அதில் உள்ள அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும். ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக அரசுத் தேர்வுத்துறையை தொடர்புகொள்ள வேண்டும்.
இதையும் படிக்க : 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?..
மாணவர்களுக்கு 2வது வாய்ப்பு
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அந்த கல்வி ஆண்டே தங்கள் கல்வியைத் தொடர இந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உதவும். இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர முடியும். அதனால் இந்த திட்டம் மிக சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் ஒரு கல்வி ஆண்டை இழப்பதை தவிர்க்க முடியும். இதனால் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் அவர்கள் உடனே தெரிந்துகொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு.