AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CWG 2026: இந்தியாவிற்கு வரப்போகும் மேலும் 2 பதக்கங்கள்.. பைனலில் களமிறங்கும் இரு சிங்கங்கள்!

Preeti Pawar and Ankush Panghal: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி ப்ரீத்தி பவார் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆனால், இந்த போட்டியில் ப்ரீத்தி வென்று தங்கப் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதி போட்டியில் ப்ரீத்தி கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை எதிர்கொள்கிறார்.

CWG 2026: இந்தியாவிற்கு வரப்போகும் மேலும் 2 பதக்கங்கள்.. பைனலில் களமிறங்கும் இரு சிங்கங்கள்!
ப்ரீத்தி பவார் மற்றும் அங்குஷ் பங்கல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jul 2026 21:48 PM IST

2026 காமன்வெல்த் விளையாட்டு (Common Wealth Games 2026) போட்டிகளின் கடைசி 2 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், வருகின்ற 2026 ஆகஸ்ட் 2ம் தேதி இப்போட்டி நிறைவடையும். இப்போட்டியில் இந்தியா இதுவரை 17 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்தியா 3 தங்கம், 10 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் பதக்கங்களுடன் மேலும் 2 பதக்கங்களை சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை பிரீத்தி பவார் (Preeti Pawar) 54 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டியில், பிரீத்தி பவார் ஜாம்பியாவின் கேத்ரின் மவாபேவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ALSO READ: காமன்வெல்த்: கணவர்தான் எல்லாமே.. வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற சீமா!

ப்ரீத்தி பவார்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி ப்ரீத்தி பவார் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆனால், இந்த போட்டியில் ப்ரீத்தி வென்று தங்கப் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதி போட்டியில் ப்ரீத்தி கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை எதிர்கொள்கிறார். ஹரியானாவின் பிவானியைச் சேர்ந்த ப்ரீத்தி பவாருக்கு வயது 22 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல் முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார். ப்ரீத்தி பவார் ஒருபோதும் குத்துச்சண்டை வீராங்கனையாக விரும்பவில்லை. இருப்பினும், அவரது மாமா வினோத் பவார் ஒரு முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரர் மற்றும் அவரது பயிற்சியாளரும் ஆவார். அவர்தான் ப்ரீத்தியை குத்துச்சண்டை வீராங்கனையாக ஆகத் தூண்டினார். தற்போது அவர் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தொலைவில் உள்ளார்.

  • பிரீத்தி பவார் (மகளிர் 54 கிலோ எடைப் பிரிவு) போட்டி
  • இறுதி போட்டியில் எதிர்கொள்பவர்: ஸ்கார்லெட் டெல்காடோ (கனடா)
  • தேதி: 1 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
  • நேரம்: பிற்பகல் 3.30 மணி (இந்திய நேரப்படி)

ALSO READ: தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா..? பைனலில் களமிறங்கும் டைமிங் இதுதான்..!

அங்குஷ் பங்கல்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 80 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டையின் இறுதிச் சுற்றுக்கு அங்குஷ் பங்கல் முன்னேறியுள்ளார். எனவே, தங்கப் பதக்கம் வெல்வதற்கு அவருக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது. அரையிறுதிப் போட்டியில், அங்குஷ் பங்கல் கனடாவின் ஜோஷுவாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். அங்குஷ் பங்கல் தொடக்க காலத்தில் கபடி விளையாடி வந்தார். ஆனால், தனது தந்தையின் ஆலோசனையின் பேரில், அவர் கபடியை விட்டுவிட்டு குத்துச்சண்டையைத் தொடங்கினார். அங்குஷுக்கு 21 வயதுதான் ஆகிறது.மேலும் இந்த வீரர் 2023-ல் நடைபெற்ற ASBC இளைஞர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

  • அங்குஷ் பங்கல் (ஆண்கள் 80 கிலோ எடைப் பிரிவு)
  • தேதி: 1 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
  • நேரம்: இரவு 10.15 மணி (இந்திய நேரம்)

Follow Us